Jun 27, 2007

ஆத்ம‌ திருப்தி

தட்டானின் வாலை பிய்த்து
புல் செருகி பறக்கவிடுங்கள்
அதற்கு ராக்கெட் என்று பெயர்

பொன்வண்டின் கழுத்தில்
நூலினைக் கோர்த்து க‌ட்டி வையுங்கள்.
அடுத்த இரவில் வ‌ண்ண‌ முட்டைக‌ளிடும்

ஈர‌ம‌ண‌லில் கிட‌க்கும்
நாயின் மீது இரத்தம் தெறிக்க‌‌க் க‌ல்லெறியுங்கள்
வலியில் ஊளையிடும்

பெண்ணொருத்தி குளிக்கும் போது
அவ‌ளுக்குத் தெரியும்ப‌டியாக‌ எட்டிப்பாருங்க‌ள்.
அவ‌ள் திட்டுவ‌து காதில் விழ‌ட்டும்

கோழியின் க‌ழுத்தை
வட்டமாக திருகிக் கொல்லுங்க‌ள்
ர‌த்த‌ம் வெளியேறாத‌ க‌றி
சுவை மிக்க‌து.

தேடுங்கள்.

ஆத்ம‌திருப்தி எப்ப‌டி வேண்டுமானாலும்
கிடைக்கும்.

3 எதிர் சப்தங்கள்:

Ayyanar Viswanath said...

நல்ல கவிதை மணி

காயத்ரி சித்தார்த் said...

எல்லார் மனதிலும் இப்படி சில குரூர உணர்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. சின்னதாய் அதிர்ச்சி கொடுத்தது உங்கள் கவிதை.. நல்லாருக்குங்க!

நந்தா said...

வாவ். மிக அருமையான கவிதை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒளிந்து கிடக்கும் அந்த குரூரத்தை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.