Nov 15, 2007

மரணம்‍-இரு கவிதைகள்

கைவிட‌ப்ப‌டுத‌லின் க‌ரிப்பு
நிராக‌ரிப்பின் வேத‌னை
புற‌க்க‌ணிப்பின் துக்க‌ம்
த‌விர்க்க‌ப்ப‌ட்ட‌ பிரிய‌ம்

கார‌ண‌ம்
எதுவுமில்லை ந‌ண்ப‌ர்க‌ளே.

எந்த‌ச் சிக்க‌லும‌ற்ற‌
ம‌ர‌ண‌த்திற்கு
ஆய‌த்த‌மாகிறேன்.

மின் விசிறியில்
த‌னித்து அலையும்
காகித‌த்தையொத்த‌
எளிய‌தொரு
மர‌ண‌த்திற்கு.
--------

ந‌ண்ப‌ர்களே
சப்தங்களைக் குறையுங்க‌ள்
அதிகார‌த்தின் சொடுக்கினை நிறுத்துங்க‌ள்
உங்க‌ள்
கொண்டாட்ட‌ங்க‌ளுக்கு ஓய்வ‌ளியுங்க‌ள்

சிரிப்பொலிக‌ளை
சிறு அழுகைக்கு பின்
எழுப்ப‌லாம்.

உற்சாகப் பிளிறலை
சில விநாடிகள்
ஒத்தி வைக்கலாம்.

மர‌ண‌ம் அர‌ங்கேறும்
இக்க‌ண‌த்தை-
நிசப்த‌த்தின் க‌ர‌ங்க‌ளுக்குள்
ஒப்ப‌டைத்து
உயிர் பிரியும் ஓசையை
ரசிக்கலாம்.

ந‌ண்ப‌ர்களே
சப்தங்களைக் குறையுங்க‌ள்.

12 எதிர் சப்தங்கள்:

கோபிநாத் said...

நல்லாயிருக்கு மணி...

\\சிரிப்பொலிக‌ளை
சிறு அழுகைக்கு பின்
எழுப்ப‌லாம்.\\

சரிதான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/மின் விசிறியில்
த‌னித்து அலையும்
காகித‌த்தையொத்த‌/

எனக்குப் பிடித்த வரிகள்.

என்ன உங்கள் எழுத்துக்களில் அடிக்கடி தற்கொலை / மரணம் வருகிறது..))

J Carrol N said...

எந்த‌ச் சிக்க‌லும‌ற்ற‌
ம‌ர‌ண‌த்திற்கு
ஆய‌த்த‌மாகிறேன்.

Vaa.Manikandan said...

நன்றி கோபிநாத்.

சுந்தர், தெரியவில்லை. மரணம் பற்றி எழுதுவது எனக்கு ஒரு வித திருப்தியைத் தருவதாகப் படுகிறது.

நன்றி ஜேசு.

Ken said...

"நிராக‌ரிப்பின் வேத‌னை
புற‌க்க‌ணிப்பின் துக்க‌ம்
த‌விர்க்க‌ப்ப‌ட்ட‌ பிரிய‌ம்"

கார‌ண‌ம் ?????????
என்னவென்று தேடிப்பாருங்கள் மரணம் மறக்கும்

Ken said...

"மின் விசிறியில்
த‌னித்து அலையும்
காகித‌த்தையொத்த‌
எளிய‌தொரு
மர‌ண‌த்திற்கு."


இதே வார்த்தைகளை வேறொரு கவிதையில் பார்த்த ஞாபகம்

Vaa.Manikandan said...

//என்னவென்று தேடிப்பாருங்கள் மரணம் மறக்கும்//

எதுக்கு மறக்கணும்?

//இதே வார்த்தைகளை வேறொரு கவிதையில் பார்த்த ஞாபகம்//

காப்பியடிச்சேன்னு சொல்ல வர்றீங்களா?

Ken said...

என் கல்லூரி ஆண்டுமலரில் ( அதன் பேர் இளந்தூது எழுத்தாளர் சுஜாதா பாராட்டிய இதழ் அது) 2000 அல்லது 2001 ஆம் ஆண்டில் பார்த்த கவிதையில் இந்த வார்த்தைகள் இதே பொருளோடு உபயோகித்தை பார்த்திருந்தேன்.

Vaa.Manikandan said...

இதே வார்த்தைகள், இதே பொருளோடா?

சபாஷ்...

Anonymous said...

"மரணம்‍-இரு கவிதைகள்"
ன் மரணம் அதுப்பற்றி நிச்சியம் யாரிடமாவது சொல்ல வேண்டும் காத்திருந்தேன். அது உங்களிடம் சொல்லிவிட்டு இன்னும் 72 மணி நேரங்களில் என் மரணத்தை சந்திக்க போகிரேன். மாயமான இந்த உலகில் வாழ்வதைவிட சாவதே மேல்...என் மரணத்திற்கு என்னை ஏமாற்றியவர்களே காரணம்.

Vaa.Manikandan said...

அன்பு ஷாஜகான்,

உங்களின் பின்னூட்டம் அதிர்ச்சியாக இருக்கிறது.

என்னால் உங்கள் மரணத்தை எவ்விதத்தில் தடுக்க முடியும் என்று தெரியவில்லை.

ஆனால் தற்கொலை என்பது எந்தச் சிக்கலுக்கும் சரியான தீர்வு இல்லை.

தங்களின் முடிவினை தயவு செய்து மறு பரிசீலனை செய்யுங்கள்.

நான் ஏதாவது வகையில் உதவ முடியுமெனில் தெரியப்படுத்தவும்.

அன்புடன்,
மணிகண்டன்.

Anonymous said...

அன்புடையீர் மணிகண்டன் அவர்களே...
தங்கள் பதில் கண்டேன், நன்றி. எனக்காக் இறைவன் தந்த ஆயுள் காலம் இன்னும் சில மணிநேரங்களில் முடிந்துவிடும். இவ்வளவுதான் என் வாழ்க்கை. எனக்காக் கண்ணீர் விடக்கூட ஒருவரும் இருக்க மாட்டார்கள். என்னில் நுழைந்தவர்கள் எல்லோரும் என் பணத்திற்காக்த்தான் என்பதை காலங்கள் சென்றாவது புரிந்துக்கொன்டேன். இந்த மாணிடமே பொய். மனித நேயங்கள் இன்று மலடாகி மரணித்து விட்டது. விலை பேச முடியாத மனித பன்புகளை இன்று மாணிடன் சாக்கடையில் விட்டுச்செல்கிறான். நான் மரணத்தை நேசிகின்றேன். அதன் வருகைக்காக இன்னும் சில மணிநேரங்கள் காத்திருகிறேன்....
என்னை அறிந்து இதுவரையிலும் எவருக்கும் தவறு செய்ததில்லை. தவறாக பிறந்துவிட்டேன் என் தாயின் வயிற்றில். என் விதி இது தான் என்று நான் அறிந்திருந்தால் தாயின் வயிற்றிலே என்னை கழைத்திருப்பேன்.
"மரணம்‍-இரு கவிதைகள்"
உங்களது இந்த கவிதை என்னை சில நிமிடங்கள் சிந்திக்க வைத்தது. கவிதையை தந்ததற்கு நன்றி.