Sep 26, 2007

உயிர்மை-50

அக்டோபர்'2007 இதழ் உயிர்மையின் ஐம்பதாவது இதழ்.

நவீன தமிழ் இலக்கியத்தில் உயிர்மை உருவாக்கியிருக்கும் சொல்லாடல்களும், கருத்துக்களும் நிகழ்காலத்திலும், எதிர்வரும் சமூகத்தின் கலை, இலக்கிய நிகழ்வுகளிலும் முக்கியமான ஆவணங்களாகின்றன.

உயிர்மையின் தலையங்கங்களும், சமூகத்தின் நிகழ்வுகளை பதிவு செய்யும் கட்டுரைகளும் மிகுந்த கவனம் பெற்றிருக்கின்றன.

உயிர்மை விமர்சனங்களிலிருந்தும் தப்பவில்லை. சமீப‌ ஆண்டுகளில் நிகழ்ந்த இலக்கிய சச்சரவுகளில் உயிர்மையின் பெயர் தீவிரமாக அடிபட்டிருக்கிறது. தொடர்ச்சியான தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது.

உயிர்மை எதிர் கொள்ளும் சிக்கல்களையும், இடையூறுகளையும் அவற்றை உயிர்மை குழுவினர் கையாள்வதையும் ஓரளவு அறிந்தவன் என்னும் முறையில், ஐந்தாவது ஆண்டாக தொடர்ந்து எவ்வித தொய்வுமின்றி வெளிவரும் உயிர்மையை தற்கால‌ தமிழ் இலக்கிய வெளியில் மிக முக்கியமான சாதனை எனச் சொல்வேன்.

இந்த ஆண்டில் கி.ரா வின் 'கரிசல் அறக்கட்டளை' விருதினை உயிர்மை பெற்றிருக்கிறது.

உயிர்மையில் எனது முதல் கவிதையை வெளியிட்டு தமிழ் இலக்கியத்திற்கு என்னை அறிமுகம் செய்து வைத்தது உயிர்மை என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது.

தொடர்ந்து வெற்றிகரமாகவும், உற்சாகமாகவும் செயல்பட உயிர்மை ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கும், உயிர்மை குழுவினருக்கும் என் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.

அன்புடன்
வா.மணிகண்டன்.

7 எதிர் சப்தங்கள்:

சலம் said...

உயிர்மையின் ஐம்பதாவது இதழுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.உயிர்மையின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

வெங்கடாசலம்.

த.அகிலன் said...

நிச்யமாக இது பாராட்டப்படவேண்டிய விசயம் தான். நானும் மனுஸ்யபுத்திரனுக்கும் உயிர்மைக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நதி said...

தரமான பல கட்டுரைகளை வழங்கும் உயிர்மைக்குப் பாராட்டுக்கள்.

பரத் said...

உயிர்மை குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

Jayaprakashvel said...

என்னளும் உயிர்ம்மை உயிர்திருக்க வாலழ்த்துவொம்

manovarsha said...

uyirmmai pathirikaya enakku romba pidikkum. nalla, nalla katurayaaa varum aama

Anonymous said...

Good words.