Jun 21, 2007

அப்துல் கலாம்: மீண்டும் ஒரு முறை.

அப்துல்கலாம் மீண்டும் ஒரு முறை குடியரசுத்தலைவர் ஆகலாம் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

நாம் வாழ்ந்த காலகட்டத்தில் செயலூக்கம் மிக்க ஒரு குடியரசுத் தலைவர் என்று ஒருவர் இருந்தாரேயானால் அது அப்துல்கலாம் மட்டும்தான் என உறுதியாகச் சொல்வேன்.

தேச‌ம் முழுவ‌தும் ல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ சிறுவ‌ர்க‌ளிட‌ம் பேசியிருக்கிறார்.இது எல்லாம் ஒரு சாதனையா என்கிறீர்களா? அது சரி.

"அக்கினிக் குஞ்சொன்று க‌ண்டேன்; அதை ஆங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்" என்ற‌ க‌விதை பொருந்தும். சிறுவ‌ர்க‌ளிட‌ம் விதைக்கும் க‌ருத்துக்க‌ள் உட‌ன‌டி ப‌ல‌ன் ஏதும் த‌ராத‌ போதும் அத‌ன் விளைவு அணைந்து போன‌தாக‌ அர்த்த‌மில்லை. கலாம் போன்ற துடிப்பான குடியரசுத் தலைவர் என்ற பட்டியல் இருந்தால் சொல்லுங்கள்.


இவ‌ர‌து சாத‌னைக‌ளை விள‌க்க‌ அல்ல‌ இந்த‌ப் ப‌திவு.

"வெற்றிக்கான‌ வாய்ப்பு உறுதியாகும் ப‌ட்ச‌த்தில் போட்டியிடுவ‌தாக‌ச் சொல்லியிருக்கிறார்". இதில் என்ன‌ த‌வ‌று இருந்து விட‌ப் போகிற‌து? . ஒரு குடிய‌ர‌சுத்த‌லைவ‌ராக‌ இருந்த‌வ‌ர், போட்டியிட்டு, தோல்வியோடு வெளியேறுவ‌தை விட‌, ஆத‌ர‌வில்லாத‌ ப‌ட்ச‌த்தில் போட்டியிலிருந்தே வில‌கிக் கொள்கிறேன் என்ப‌தில் எந்த‌ த‌வ‌றும் இருப்ப‌தாக‌த் தெரிய‌வில்லை,

சோனியா ஏன் எதிர்க்கிறார் என்று குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌து. அவ‌ர‌து ப‌த‌வியேற்கும் ச‌ம‌ய‌த்தில் அவ‌ர‌து குடியுரிமை குறித்தான‌ வினாவொன்றை க‌லாம் எழுப்பிய‌தாலேயே சிங் அவ‌ர்க‌ளை பிர‌த‌மராக்கி 'தியாகி' ஆனார் என்ற‌ பேச்சு எழுந்ததே அது உண்மையாக‌ இருக்குமோ என‌த் தோன்றுகிற‌து? வேட்ப்பாளரை அறிவித்துவிட்டார்களாம். விலக்குவது மிகக் கடினம் அல்லவா? சரி.

ப‌த‌வி வெறி, பெண்க‌ளுக்கான‌ வாய்ப்பினை ம‌றுக்கும் ஆணாதிக்க‌ம் என்ற கூறுகளை எல்லாம் கலாம் மேல் பதிப்பதை வ‌ற‌ட்டுக் கூச்ச‌லென்று சொல்வேன். ப‌த‌வியைப் பிடித்துத் தொங்கும் சாதார‌ண‌ அர‌சிய‌ல்வாதியில்லை க‌லாம். பதவியும் பணமும் பொருட்டாக இருந்ததில்லை அவருக்கு.

ச‌ந்திர‌பாபு நாயுடு சொன்ன‌தைத் திரும்ப‌ச் சொல்வ‌தானால் "ம‌க்க‌ள் நேர‌டியாக‌ வாக்க‌ளிப்ப‌தென்றால் க‌லாம் வெற்றி குறித்து பிர‌ச்சினையேயில்லை."

ஆனால் பாழாய்ப்போன‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் அல்ல‌வா வாக்க‌ளிக்கிறார்க‌ள்?

நீங்க‌ள் ஆத‌ரவினைத் தெரிவிப்ப‌தானால் க‌லாமின் மின்ன‌ஞ்ச‌லுக்கு ஒரு மெயில் த‌ட்டிவிடுங்க‌ள். ந‌ம்மால் இய‌ன்ற‌து அது ம‌ட்டுமே.

Email: presidentofindia@rb.nic.in

17 எதிர் சப்தங்கள்:

கோவி.கண்ணன் said...

மான்புமிகு கலாம் மிகச்சிறப்பாக தன் பணியை செய்திருக்கிறார் என்று பாராட்டலாம். அதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை.

100 கோடி இந்தியர்களில் அந்த பதவியை அடைய தகுதியானவர்கள் எவருமே இல்லையா ? உயர்பதவி என்றாலும் அதில் அவர்களுக்கு கிடைக்கும் அதே போன்று மதிப்பும் மரியாதையும் மற்றோரு இந்தியனுக்கு கிடைக்க வேண்டாமா ? ஏற்கனவே இருந்தவர்களே மீண்டும் வரும் போது அப்படி ஒரு நல் வாய்ப்பு எவரோ ஒரு நல்ல இந்தியனுக்கு மறுக்கப்படுவதாக நினைக்கிறேன். அதாவது கேஆர்நாராயணனே மீண்டும் வந்திருந்தால் அப்துல் கலாமுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. நற்செயல்பாடுகளால் அவர்களே மீண்டும் வரவேண்டும் என்று சொல்பவர்கள் யோசிக்க வேண்டும்.

Vaa.Manikandan said...

கண்ணன்,

வாய்ப்பு எனில், தற்பொழுது களத்தில் இருப்பவர்களை மட்டுமே கருத்தில் கொள்வோம். அப்படியெனில், இருக்கும் மூவரில், கலாம் சாலச்சிறந்தவர் என்பது என் கருத்து.

Arasu Balraj said...

என்னுடைய ஓட்டும் கலாமுக்கே!
இது குறித்து அவருடைய பதவியை நீட்டிக்க வேண்டுமென மின்னஞ்சல்களில் தொடர் அஞ்சல்கள் உருவான பொழுதே நான் எழுதியிருக்கிறேன்.படித்துப் பாருங்கள்!

Anonymous said...

கோவியாரே...

கட்சி சொல்வதை அப்படியே ஆதரிக்கிறீங்களா ?

இந்த பிரதீபா பாட்டில் மாதிரி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மீண்டும் வேண்டுமா ?

இந்த கிழவி வந்து ஒன்னும் சாதிக்கப்போவதில்லை...

அம்மா மனதில் உதித்த திட்டம் என்பதும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க எப்படித்தான் மனது வருகிறதோ ?

Anonymous said...

இங்க ஏன்யா கட்சியைக் கொண்டு வர்றீங்? உங்க தலைவன பார்க்கிறோம் இருங்க....தமிழன ஆதரிக்குறத‌

கோவி.கண்ணன் said...

//செந்தழல் ரவி said...
கோவியாரே...

கட்சி சொல்வதை அப்படியே ஆதரிக்கிறீங்களா ?

இந்த பிரதீபா பாட்டில் மாதிரி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மீண்டும் வேண்டுமா ?

இந்த கிழவி வந்து ஒன்னும் சாதிக்கப்போவதில்லை...

அம்மா மனதில் உதித்த திட்டம் என்பதும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க எப்படித்தான் மனது வருகிறதோ ?
//

செந்தழல் ரவி,

இந்த சர்சைகள் ஆரம்பமாகும் முன்பே நான் சொல்லியதைத்தான் சொல்லி இங்கே இருக்கிறேன்
மே.25 அப்போது பிரதிபா பட்டிலும் தெரியாது...வல்லபாய் பட்டேலும் போட்டி இடுகிறார்கள் என்று தெரியாது.

நான் இங்கே பிராதிப பட்டீல் சார்பாக ஒன்றுமே சொல்லவில்லையே !

மேற்கண்ட பின்னூட்டத்தை மட்டும் படித்து என்குறித்து நீங்கள் சொல்லிய கருத்து முற்றிலும் தவறானது. மறுக்கிறேன்.

நல்லடியார் said...

தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் 2002 இல் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டபோது சொல்லப்பட்ட தகுதிகளைவிட, தற்போது மேலதிக தகுதிகளுடன் மிளிர்கிறார்.

முந்தைய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க நிறுத்திய போதிலும் ஒருமனதாக காங்கிரஸ் ஆதரிக்கக் காரணம்,பின்னர் வரவிருந்த (2004) பாராளுமன்ற தேர்தலில் (சோனியாவின் குடியுரிமை விசயத்தில்) கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்வார் என்ற அரசியல் கணக்கீடும் இருந்தது.

அதேபோல் பா.ஜ.கவுக்கு குஜராத் படுகொலைகளால் உலக அரங்கில் ஏற்பட்ட தலைக்குனிவை சரிசெய்ய அப்துல் கலாம் அவர்களின் தேர்வு கைகொடுத்தது.

பிரதிபா படீலை முன்மொழிந்து, ஒரு பெண் ஜனாதிபதியாகும் நிலையை உருவாக்கி இருப்பதாகச் பெருமிதப்பட்டுக் கொள்பவர்கள், மக்களின் மறதியை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும். சென்ற முறை இடதுசாரிகளால் முன்னிருத்தப்பட்ட கேப்டன் லட்சுமி சேய்காலும் ஒரு பெண்தான் என்பது அவர்களுக்குத் தெரியதா?

எது எப்படியோ, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு (ஓரிருவர் தவிர) ஒவ்வொரு ஜனாதிபதிக்கும் அரசியல்வாதிகளால் தீர்ப்பெழுதப்படுவது நம் நாட்டின் சாபக்கேடு.

சந்திரபாபு நாயுடு சொன்னதுபோல், ஜனாதிபதியை மக்களே தேர்ந்தெடுக்கும் நிலை வந்தால் எதிர்கால ஜனாதிபதிகள் கவுரமாக தங்கள் பணிக்காலத்திலிருந்து விடுபடுவார்கள்.

Vaa.Manikandan said...

இதில் சில மடத்தனமான விவாதங்கள் அரங்கேறுகின்றன.

1) பெண்ணுக்கு ஆதரவில்லை என்பது. பெண் என்பதற்காக மட்டும் ஆதரிப்பதானால் நாட்டில் என்னனவோ அரங்கேறும்.

2)பிர‌தீபா பாட்டீலுக்கு த‌குதியில்லையா என்ற‌ அடுத்த‌ வினா எழுப்பும் முன்னாக‌, க‌லாம் போட்டியிடும் பட்சத்தில், கலாம்மின் த‌குதிகளைக் காட்டிலும் சிறந்த வேட்பாளரா பாட்டீல்?

3) முடிச்சு முழுவதும் சோனியாவின் கையில். சகுனித்தனம் முழுமையாக வெளிப்படும். பொறுத்திருப்போம்.‌

Anonymous said...

போட்டி இடுபவர்களில் தகுதி என்பதை விட, எதிர்காலத்தின் நலன் கருதி பார்த்தால் ஓரு விஞ்ஞானி குடியரசு தலைவராக வருவதில், இந்தியாவுக்கு மிக்க பயன் அழிக்கும்

Vaa.Manikandan said...

அனானி,

//இந்தியாவுக்கு மிக்க பயன் அழிக்கும்//


அழிக்குமா? அளிக்குமா?

உள்குத்தா? :)

சந்திப்பு said...

மணி இந்த ரேசில் சிவாஜியையும் சேர்த்து விட்டால் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? யார் வெற்றி பெறுவார்கள்?

Vaa.Manikandan said...

மக்களை,சிவாஜிக்கு வாக்களித்து அவரை குடியரசுத்தலைவராக்கும் முட்டாள்கள் என்று நினைத்தால் அது நம்ம தப்புங்க.

நந்தா said...

இதே ஒரு மாதத்திற்கு முன்பு, குடியரசுத்தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் மட்டும்தான் மீண்டும் வர வேண்டும் என்ற கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவன்தான் நானும். இது அவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அல்ல. புதியவர்க்கு வாய்ப்பு வழங்கப் படலாமே என்ற எண்ணம்தான்.

ஆனால் இப்போது காங்கிரஸ் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால், எப்படியாவது கலாமே மீண்டும் முதல் குடிமகனாக ஆகிவிட வேண்டும் என்று கண்ணீர் வடிக்கத் தோன்றுகிறது.

மூன்றாவது அணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலாமை முன் மொழிந்ததற்கு நமது அணி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற அரசியல் காரணங்களிற்காகவே இருக்கட்டும். அதைப்பற்றிக் கவலையில்லை. இப்போது இருக்கும் போட்டியாளார்களில் பிரதீபா பட்டீல் கலாம் கிட்டே கூட நெருங்க முடியாது.

Jazeela said...

அப்துல் கலாமே தொடர வேண்டுமென்ற தங்களில் கருத்திலிருந்து மாற்று கருத்து சொல்பவர்கள் புதியவர்க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியில் இருவர்தான் மாற்றி மாற்றி பதவி வகிக்கிறார்கள் அப்போது ஏன் புதியவர்கள் வர வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் தோன்றவில்லை? மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென்று இருந்தால் மீண்டும் கலாம் என்பதில் சந்தேகமேயில்லை.

பொன்ஸ்~~Poorna said...

//தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியில் இருவர்தான் மாற்றி மாற்றி பதவி வகிக்கிறார்கள் அப்போது ஏன் புதியவர்கள் வர வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் தோன்றவில்லை?//
ஜெஸிலா, ஏற்கனவே புதியவர் (வேற யாரு, இளவரசர் தான்) சீக்கிரமே வந்தாலும் வந்திடுவார் போலக் கெடக்கு, நீங்க வேற ;)

நந்தா சொல்வது போல் போன வாரம் வரைக்கும், கலாம் அடுத்த வருடமாவது இந்தத் தொல்லைகள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய, ஓய்வெடுக்கப் போகட்டும் என்று தான் நானும் நினைத்திருந்தேன். ஆனா இப்பத்தைய தேர்வுகளைப் பார்த்தால் கலாம் பரவாயில்லை..

மற்றபடி பெண்மணிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யாரும் ஏன் போன தேர்தலில் நின்ற லக்ஷ்மி சேய்காலை மீண்டும் முன்னிறுத்துவது பற்றி யோசிக்கவில்லை?

வாசகன் said...

அப்துல் கலாம் என்கிற விஞ்ஞானப்பொறியை அரசியல் காரணங்களுக்காக குடியரசுத்தலைவர் மாளிகையில் அடைத்து வைக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டதுண்டு அப்போது.
அந்த அடைப்புகளையும் மீறி மாணவர்களிடம் நற்சிந்தனைகளை அவரால் பரப்பிவிட முடிந்தது நல்ல விதயம் தான் என்பதும் புரிந்தது.

இப்போதும் அப்ஸலைத் தண்டிக்காததற்காக சிவசேனைகளும், ந.மோடிக்கு 356 அளிக்காததற்காக தீவிர முஸ்லிம் அமைப்புகளும் அவரை எதிர்க்க நினைக்கின்றன.

இப்போதைய ஆதங்கமெல்லாம் நமது ஜனநாயகத்தைப்பற்றித்தான்.
அப்துல்கலாம்களை ஜனாதிபதியாக்கும் அளவுக்கு வலிமைவாய்ந்த நமது ஜனநாயகம், பிரதமர்களாக வரவிடாத அளவுக்கு "திறம்" மிக்கதுமாகும்.

Vaa.Manikandan said...

பேசியவர்களுக்கு நன்றி.

//ஏற்கனவே புதியவர் (வேற யாரு, இளவரசர் தான்) சீக்கிரமே வந்தாலும் வந்திடுவார் போலக் கெடக்கு, நீங்க வேற //

ஸ்டாலின் முதல்வராகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயமே.

மு.க வின் மகன் என்ற தகுதியோடு உள் வந்தவர் என்று சொன்னாலும், அதே தகுதியில்தான் கட்சியில் இந்த அளவுக்கு மேல் வந்தவர் என்று சொன்னாலும், ஸ்டாலின் அளவுக்கு எந்தக் கட்சித் தலைவரின் மகனும் உழைத்ததாகவோ அல்லது காத்திருந்ததாகவோ தெரியவில்லை.

இது வேறொரு விவாதம் என்பதால் இன்னொருமுறை பேசுவோம்.