May 18, 2007

நகுலன்: அஞ்சலி

தமிழின் மிக முக்கியமான கவிஞரான நகுலன் நேற்று (17 மே,2007) காலமானார்.

1922 ஆம் ஆண்டு பிறந்த டி.கே.துரைசாமி புதினம்,மொழிபெயர்ப்பு, சிறுகதை, விமர்சனம் என பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர்.

திருவனந்தபுரத்தில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளாது வாழ்ந்தார்.

தன் இறுதி காலத்தில் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்ட நகுலனின் கவிதைகளில் இருக்கும் மெளனம், தமிழின் நவீன கவிதைகளில புதிய திறப்புகளுக்கான அடிப்படை.

விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
கவிஞரின் இழப்புக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

நகுலன் கவிதைகள்:

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

அவன்

"செத்துவிட்டான்"
என்றாய்
எனக்கு என்னவோ
அவன் இருந்ததுதான்
இன்றும்
என் உள்ளத்தில்
இருந்துகொண்டிருக்கிறது.

5 எதிர் சப்தங்கள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

:((

இளங்கோ-டிசே said...

சில தினங்களுக்கு முன் தான் நகுலனின் புகைப்பட ஆல்பமொன்றை புதியபார்வை இதழொன்றில் பார்த்துக்கொண்டிருந்தேன். குழந்தை நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றார் என்று அப்படங்களைப் பார்த்து நினைத்துக்கொண்டிருந்தேன். வருத்தமான செய்தி.

Ayyanar Viswanath said...

இந்த விடுமுறை நாளின் விடியல சோகமாக்கிட்ட மணி

த.அகிலன் said...

ம் அண்மையில்தான் சீனிவாசன் எடுத்த நகுலனின் புகைப்படங்களப் பார்த்தேன் மிகவும் சோகமான செய்தி

Karthik S said...

As a response, just repeating the second poem.