Apr 17, 2007

எழுதிவிட முடியாத ஒரு கவிதை

ஒவ்வொரு கணமும்
கனக்கிறது
* * *
உடைக்கவே முடியாத
மெளனம்.

மின்னல் முறிவது போல்
வந்து செல்லும்
முத்தத்தின் ஞாபகமிச்சங்கள்.

மடங்கிய காகித நுனிக்குள்
சிக்கியிருக்கும்
குங்குமத் துகள்.


*****
யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது.

7 எதிர் சப்தங்கள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//மடங்கிய காகித நுனிக்குள்
சிக்கியிருக்கும்
குங்குமத் துகள்.//


நல்ல வரிகள்

பாரதி தம்பி said...

//யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது.//

ரொம்ப நல்லாருக்கு.

தமிழ்நதி said...

\\யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது\\

எல்லோராலும் எழுதப்பட்ட சொற்களைக் கொண்டமையக் காத்திருப்பதுதானே அதுவும். இந்தக் கவிதைக்கு எதிர்மறையான வரிகளைக் கொண்டமைந்த கல்யாண்ஜியின் கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது.

பொன்ஸ்~~Poorna said...

ரொம்ப நாள் கழித்து இனிமையான கவிதை.. உங்களிடமிருந்து..

Ayyanar Viswanath said...

யாராலும் எழுதிவிட முடியாத
ஒரு கவிதை இன்னும் இருக்கிறது

நெஜம் மணி :)

குசும்பன் said...

இனிமையான கவிதை..

அன்புடன் அருணா said...

ஆனந்தமாக இருக்கிறது படிக்க!