Apr 16, 2007

பிரியாணி: குறுந்தகவல்.

மன்னிக்கனும். தொடர்ச்சியாக பிரியாணி ப‌ற்றி எழுதுவதற்கு. ஒரு குறிப்பொன்று கிடைத்தது.

பிரியாணியின் தொட‌க்க‌ம் குறித்த‌ வ‌ர‌லாற்றுக் குறிப்பு.

அர‌பு நாடுக‌ளின் ப‌டைவீர‌ர்க‌ள் போர்க‌ளுக்குச் செல்லும் போது, ஆடு இன்ன பிற‌‌ வில‌ங்குகளையும் தங்களோடு ஓட்டிச் செல்வார்க‌ளாம். அவ‌ற்றின் மீது பொதிக‌ளாக‌ அரிசியும், கோதுமையும் இருக்கும்.

அங்க‌ங்கு உட‌ன் வ‌ரும் வில‌ங்குக‌ளைக் கொன்று ச‌மைப்ப‌துண்டு.க‌றியோடு சேர்த்து அரிசியை வேக‌வைத்தால் அது "பிரியாணி", க‌றியோடு கோதுமை என்றால் அது "ஹ‌லீம்".

மீத‌மாகும் ஆட்டின் உறுப்புக‌ளை இர‌வு முழுவ‌தும் வேக‌வைத்து உண்டால் அது பாயா/ந‌ஹ‌ரி.

இந்த உணவுமுறைக்கு அடிப்ப‌டையான‌ கார‌ண‌ம் வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ உட‌ல்திற‌னோடு இருக்க‌ வேண்டுமென்ப‌து.

இப்ப‌டி உருவான‌ பிரியாணி, ஹைத‌ராபாத்திற்கென‌ சிற‌ப்பாக‌ அமைய‌க் கார‌ண‌ம், ச‌ல‌ர்ஜ‌ங்(Salar Jang), விஹார் அல் உம‌ரா(Viqar ul umrah) போன்ற‌ ராஜ‌ வ‌ம்ச‌ நிஜாம்மார்கள்.

த‌ங்க‌ளின் அர‌ச‌வை ச‌மய‌ற்கார‌ர்க‌ளை ஊகுவித்து சிற‌ப்பான வாச‌னைப் பொருட்க‌ள், விலையுய‌ர்ந்த‌ உண‌வுப்பொருட்க‌ளைச் சேர்த்து, தனியான சமையல் வழிமுறையைப் பின்பற்றி, பிரியாணியை ஒரு வ‌ழி செய்திருக்கிறார்க‌ள். இப்படியான பிரியாணி, ஹைத‌ராபாத் பிரியாணி ஆகிவிட்ட‌து.

பிரியாணி ச‌மைக்கும் போது ச‌மைய‌லுக்குப் ப‌ய‌ன்ப‌டும் பாத்திர‌ங்க‌ள், க‌ர‌ண்டிக‌ள் கூட செப்பால் ஆன‌வையாக‌ இருக்கும். அந்த‌ அளவிற்கு க‌வ‌னம் கொடுக்கிறார்கள்.

ஹ‌லீம், ர‌ம‌லான் மாத‌த்தில் ம‌ட்டும் கிடைக்கும் ஒரு வ‌ஸ்து. கறியோடு கோதுமை சேர்த்து நைய‌ப்புடைத்து கூழ் போலாக்கி, பெரிய செப்புப் பாத்திரத்தில் வெகு நேர‌ம் கொதிக்க‌ வைத்துக் கொடுப்பார்க‌ள்.

பாயா சென்னை வ‌ரைக்கும் வ‌ந்துவிட்ட‌து. எங்க‌ள் ஊர்ப்ப‌க்க‌ம்(கோபி) எல்லாம் பாயா என்றால் தெரியாது.

இங்கு வ‌ந்து சென்றால் ஒன்றை நிச்ச‌ய‌ம் நீங்க‌ள் சொல்லிச் செல்வீர்கள். "ஹைத‌ராபாத்ல‌ நல்லா சாப்பிடுறாங்க‌".

(த‌க‌வல் நன்றி: ஹைத‌ராபாத் பிரியாணி ஹ‌வுஸ் :))

11 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

சங்க இலக்கியத்தில் ஊன் சோறு குறித்து விரிவாக‌ கூறப்பட்டுள்ளது. அரிசி உற்பத்தி செய்ய முடியாத அரபு நாட்டில் முதலில் எப்படி உருவகியிருக்கும்?. கொஞ்சம் யோசிச்சா உண்மை பக்கென புரியும்.

புள்ளிராஜா

Vaa.Manikandan said...

யோசிச்சா என்ன புரியுமென்று தெரியவில்லை. பிரியாணி இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்குமென்று சொல்ல முடியவில்லை. சங்க இலக்கியத்திற்கெல்லாம் போக வேண்டுமா? ஊண்சோறு என்ற குறிப்பு பற்றி முழுவதுமாக எனக்கு தெரியவில்லை.

ஒரு நானூறு அல்லது ஐநூறு வருஷம் முன்பாக பிரியாணி வந்திருக்கலாம். அப்பொழுது அராபியர்களுக்கு அரிசி கிடைத்திருக்காது என்று சொல்ல முடியவில்லை.

ஆனால் தமிழ்நாட்டுக்காரந்தான் பிரியாணியைக் கண்டுபுடிச்சான்னு இதில் எல்லாம் பெருமை அடிக்க வேண்டும் என நான் யோசிக்கவில்லை.

நாமக்கல் சிபி said...

பதிவின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது.

இனி மேல் பாருங்க! அடிச்சி ஆடுறோம்!

மக்கா! எல்லாரும் ஓடியாங்க!

சென்ஷி said...

அப்ப பிரியாணிய கண்டுபிடிச்சது தமிழ்நாட்டுக்காரனில்லங்கறீங்க ..
அப்படித்தானே..

(ஒகேவா சிபி) :))

சென்ஷி

Anonymous said...

"ஆனால் தமிழ்நாட்டுக்காரந்தான் பிரியாணியைக் கண்டுபுடிச்சான்னு இதில் எல்லாம் பெருமை அடிக்க வேண்டும் என நான் யோசிக்கவில்லை."


சாமி! தமிழ்னாட்டுக்காரன் கண்டு பிடிச்சான் என்ற பெருமை பேச விரும்பவில்லை. நாம் அடைந்திருக்கின்ற வளர்ச்சிக்கு நமது கண்டுபிடிப்புக்கள் மட்டும்தான் காரணம் எனக் கூற வரவில்லை. சங்க இலக்கியத்தில் ஊண் சோறு படை வீரர்கள் உண்டார்கள் என சலமன் பாப்பையா அவர்கள் கூறியது நினைவுக்கு வந்தது. பிற்காலத்தில் இந்திய ஊண் சோறு அரபு ஆக்கிரமிப்பாளர்களைக் கவர்ந்த்திருக்கலாம்.

PULLIRAJA

உண்மைத்தமிழன் said...

ஐயையோ.. அப்ப அரபுக்காரங்க கண்டுபிடிக்கிவரைக்கும் நம்ம தமிழ்நாட்ல யாருக்குமே பிரியாணியைப் பத்தித் தெரியாதா?

ஐயையோ.. அப்போ நம்ம தமிழ்நாட்ல ஆடு, மாடு, கோழியையெல்லாம் வைச்சு எப்படி திம்பாங்க?

ஐயையோ.. அரிசிதான் அப்பல்லாம் நம்ம வீட்டு முற்றத்துல இருந்து மாட்டுக் கொட்டகைவரைக்கும் அடுக்கி வைச்சிருப்பாந்திருப்பாங்களே. அதையெல்லாம் வைச்சு என்ன செஞ்சாங்க?

ஐயையோ.. அரபு நாட்ல இருந்து வந்த ஓசி அறிவை வைச்சுத்தான் 'தமிழன்' பிரியாணி சாப்பிடுறானா?

ஐயையோ.. ஐயையோ.. ஐயையோ..

Vaa.Manikandan said...

அடக்கடவுளே...

பிரியாணி மேட்டருக்கு சிண்டு முடிய இத்தனை ஆளுங்களா? நல்லா இருங்கய்யா...நல்லா இருங்க....

புள்ளியாரே!
சாலமன் பாப்ய்யா சொன்னாரா? ஊண் சோறுன்னா கறியோடு கலந்த சோறாகக் கூட இருக்கலாம் இல்லயா?

பிரியாணி செய்யும் முறையும் ஊண் சோறு செய்யும் முறையும் ஒன்றா என்று தெரியவில்லை. அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என நான் கருதுகிறேன்.

G.Ragavan said...

பிரியாணியிலேயே பலவிதமான செய்முறைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒரு விதம். நீங்கள் சொல்லும் வரலாறு ஐதராபாத்காரர்கள் முன்னிறுத்துவது. இதில் ஓரளவு உண்மை இருப்பதென்னவோ மெய்தான். ஆனால் பழைய நூல்களில் ஊண்சோறு இருக்கிறது. செய்முறை என்னவோ இன்றைய பிரியாணி போலத்தான். கறியையும் சோறையும் ஒன்றாக வேக வைப்பது. ஆனால் ஐதராபாத் பிரியாணி அப்படியல்ல. கறியும் சோறும் தனித்தனியாக வேகும்.

இன்றைய நிலையில் பிரியாணிக்கு ஐதராபாத் நிஜாம்கள் சொந்தம் கொண்டாடினாலும்....தென்னிந்தியாவே பிரியாணியின் மூதாதையர் நாடாக இருந்திருக்க வேண்டும் என்பது கணிப்பு. பேராமவுண்ட் ஏர்லைன்சில் ஊண்சோறு செய்வது எப்படி என்றும் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் ஒன்று...ஐதராபாத்தில் நன்றாகச் சாப்பிடுகிறார்கள்.

சென்ஷி said...

என்ன இருந்தாலும் தமிழனை சாப்பாட்டு விஷயத்துல இவ்வளவு கம்மியா எடை போட்டிருக்கக்கூடாது...

பிரியாணியில சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, 5 ரூவா பிரியாணி, ஐஸ் பிரியாணின்னு வகைக்கொன்னா அறிமுகப்படுத்துன தமிழனை இப்படி மட்டம் தட்டக்கூடாது. :)

Anonymous said...

நினைவிருக்கட்டும்! காக்கா பிரியாணிக்கும் நாங்க தான் உரிமை கோருவோம்.


புள்ளிராஜா

TBCD said...

இந்த வேளையிலே குஷ்காவைக் கண்டுப்பிடித்தவர்கள் தமிழர்களாகத் தான் இருக்க முடியும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

"சுவையான" உரையாடல்கள்...

தலப்பாக்கட்டு பிரியானி, ஆம்பூர் பிரியானி போன்று தமிழகத்தில் பிரியானி ஒரு சிறப்பு அம்சமாக இருந்தாலும், பொதுவாக ஹதாராபாதி பிரியானிக்கு இருப்பதுப் போல் செய்முறை இல்லாமல் இருப்பது மனக்குறையே.. :(