Mar 1, 2006

CNN IBN் இல் தமிழ் வலைப் பதிவு

இன்று புஷ் வருகை குறித்தான செய்தியில், அவரது வருகைக்கான எதிர்ப்பு குறித்தான செய்தியும் ஒளிபரப்பப் பட்டது. அதில் கம்யூனிஸ்ட்களின் வலைப்பூ பிரதானமாக தென்பட்டாலும், தமிழில் 'இன்று ஈரான்(அல்லது ஈராக்- சரியாக கவனிக்க இயலவில்லை)..." என்ற தலைப்பில் நமது நண்பர் ஒருவர் எழுதிய பதிவும் தென்பட்டது. அவர் யார் என்று தெரியவில்லை. எனினும் வாழ்த்துக்கள். உலகளாவிய கவனம் பெறும் பதிவுகள் குறித்து மகிழ்ச்சி.

2 எதிர் சப்தங்கள்:

Muthu said...

ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் நமது நண்பர் சந்திப்பின் வலைப்பதிவு காட்டப்பட்டுள்ளது.

www.santhipu.blogspot.com


தோழருக்கு வாழ்த்துக்கள்.

சந்திப்பு said...

நன்பர்களே! எனக்கு மூன்று நாட்களாக உடல் நலம் சரியில்லை. அதனால் அலுவலகத்திற்கும் முழுக்குப் போட்டு விட்டேன். இன்று காலையில் அலுவலகத்திற்கு வந்தவுடன், ஒரு நண்பர் - சி.என்.என். டி.வி.யில் தமிழ் பிளாக் ஒன்றை காண்பித்தார்கள் என்ற தகவலைக் கூறினார். நான் சி.என்.என். செய்தியை பார்க்கவில்லை. இருப்பினும் ஒரு மனதிற்குள் குழப்பம் இருந்துக் கொண்டே இருந்தது.


அந்த குழப்பத்திற்கு முடிவு கட்டியுள்ளனர் நண்பர் வா. மணிகண்னும் - நண்பர் முத்துவும். இருவருக்கும் எனது மனப்பூவர்மான நன்றிகள்...


இது எனக்கு மகிழ்ச்சிதரக்கூடிய ஒன்றே என்றாலும், அதைவிட தமிழ் பிளாக்குகளின் பாத்திரம் மிகப் பெரிய அளவிற்கு மக்களை சென்றடைந்திருக்கும் என்பது குறித்து கூடுதல் மகிழ்ச்சி.


இன்று காலை தமிழ் மணத்தை திறந்து பார்த்ததும் பல பிளாக்குகள் புஷ் எதிர்ப்பு - புஷ்ஷின் அடாவடித்தனம் - மோசடித்தனத்தை தோலுரித்துள்ளனர். அதில் நிலாவின் ஈராக் போர்க்கைதிகள் குறித்த பதிவும், அதிரைக்காரனின் புஷ்ஷுடனான நேர்க்காணலும் மிக அருமையாக இருந்தது. ஆங்கிலத்தில் மட்டுமே இதுபோன்ற விவாதங்கள் நடந்து வரும் சூழலில் தமிழில் அமெரிக்க - புஷ் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் என் நன்றிகள்... இன்று அலுவலகத்தில் ஏராளமான வேலைகள் குவிந்துள்ளதால் ஒரு சிலவற்றிற்கு மட்டுமே கமெண்ட் அனுப்பியுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்