Dec 23, 2009

குழந்தை அழுது கொண்டிருக்கிறது

எல்லோரும் கலைந்துவிட்ட
மைதானத்தில்
குழந்தை
அழுது கொண்டிருக்கிறது

தேம்பலுக்கான காரணம் அதனிடமில்லை
விசும்பலுக்கான பொருளும் இல்லை
என்றாலும்
அழுது கொண்டிருக்கிறது

அது
கருணையை எதிர்பார்க்கவில்லை
நண்பர்களை விரும்பவில்லை
ரொட்டித் துண்டின் பசியாற்றலை நினைக்கவில்லை
ஆனால்
அழுது கொண்டிருக்கிறது


குழந்தையின் கண்ணீர் துக்கரமானது
மட்டுமில்லை
பரிசுத்தமானதும்.

குழந்தையின் துக்கம் கசியச்செய்வது
மட்டுமில்லை
தனிமையானதும்.

அவை
பதில்களற்ற வினாக்கள்
மட்டுமில்லை
அவிழாத புதிர்களும்.

சிறு மழை
இந்த
அழுகையை நிறுத்தலாம்
ஒரு
குருவி கவனத்தை திசை திருப்பலாம்
மீறி
அழுது கொண்டிருக்கிறது

கைவிடப்பட்ட மைதானத்தில்
அக்குழந்தையின்
உதிராத
கண்ணீர்த்துளியில்
யாரும் கலையாத
விளையாட்டு
ஒன்றை உருவாக்கும்
அம்மாவுக்கு
தெரிந்திருக்கிறது
அந்த
அழுகையை நிறுத்த.

8 எதிர் சப்தங்கள்:

sathishsangkavi.blogspot.com said...

//கைவிடப்பட்ட மைதானத்தில்
அக்குழந்தையின்
உதிராத
கண்ணீர்த்துளியில்
யாரும் கலையாத
விளையாட்டு
ஒன்றை உருவாக்கும்
அம்மாவுக்கு
தெரிந்திருக்கிறது
அந்த
அழுகையை நிறுத்த.//

அழகான கவிதை............

உங்க மகன் எப்படி இருக்கிறார் மணி.............

சென்ஷி said...

நல்லாயிருக்குண்ணே.

நவீன் said...

romba nalla irukku...

Vaa.Manikandan said...

நன்றி சங்கவி. யாவரும் நலம் :)

நன்றி சென்ஷி, நவீன்.

கலையரசன் said...

//குழந்தையின் துக்கம் கசியச்செய்வது
மட்டுமில்லை
தனிமையானதும்.//

இது கவித...

Ganesh Gopalasubramanian said...

பாசம் மட்டுமே இப்படி நம்மை இணைத்திருக்கும். கால ஓட்டத்தில் போகும் வழி என்னவென்ற புதிருடனும் போய்க்கொண்டிருக்கிறோம்.

நல்ல கவிதை, குழந்தையின் அழுகையை படிமமாக்கிய விதம் அருமை! ”விசும்பலுக்கான பொருள்” பட்டாசான மொழிக்குறி!

// கண்ணீர் துக்கரமானது
கண்ணீர் துக்ககரமானது

// துக்கரமானது மட்டுமில்லை
ஒரு சின்ன ஐயப்பாடு. ”துக்ககரமானது மட்டுமல்ல” என்றிருக்க வேண்டுமோ?
”துக்ககரமானதாக” என்று எழுதும் போதும் மட்டும் ”மட்டுமில்லை” வருமென்று நினைத்திருக்கிறேன். அதனால் இந்த ஐயப்பாடு.

ஆதி said...

//கைவிடப்பட்ட மைதானத்தில்
அக்குழந்தையின்
உதிராத
கண்ணீர்த்துளியில்
யாரும் கலையாத
விளையாட்டு
ஒன்றை உருவாக்கும்
அம்மாவுக்கு
தெரிந்திருக்கிறது
அந்த
அழுகையை நிறுத்த//

ஆழமான வரிகள்.. பெருந்துயர்களில் சிக்க ஆற்றொன்னாது கதறும் பொழுதில் நம் அழுகையை நிறுத்தி காயங்களில் களிம்பிடும் காலமும் இவ்வன்னைக்கு சமமாகும்..

உங்கள் வலைப்பூவில் இருக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் ரசிகன் நான்..

பாராட்டுக்கள்..

ஆதி said...

//கைவிடப்பட்ட மைதானத்தில்
அக்குழந்தையின்
உதிராத
கண்ணீர்த்துளியில்
யாரும் கலையாத
விளையாட்டு
ஒன்றை உருவாக்கும்
அம்மாவுக்கு
தெரிந்திருக்கிறது
அந்த
அழுகையை நிறுத்த//

ஆழமான வரிகள்.. பெருந்துயர்களில் சிக்க ஆற்றொன்னாது கதறும் பொழுதில் நம் அழுகையை நிறுத்தி காயங்களில் களிம்பிடும் காலமும் இவ்வன்னைக்கு சமமாகும்..

உங்கள் வலைப்பூவில் இருக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் ரசிகன் நான்..

பாராட்டுக்கள்..