Oct 22, 2009

குடித்து விட்டு பேசலாம்

நான் லார்ஜ் விஸ்கி அடிச்சேன் அடுத்தவன் ரம் தான் அடிச்சான், கூட இருந்தவன் சைட் டிஷ் மட்டும் சாப்பிட்டான் எங்களுக்குள் பயங்கர சண்டை வந்து மூக்கை உடைத்துக் கொண்டோம் என்றால் அது பெரிய பரபரப்பாக ஆகிவிடுகிறது. இந்த நிகழ்ச்சியை எழுத்து வடிவமாக்கினால் இலக்கியச் சண்டை என்று கொடிபிடிக்க ஒரு கூட்டம் சேர்ந்து விடுகிறது. கிராமத்தில் அல்லது நகரத்தில் டாஸ்மாக் கடைகளுக்குள் முன்னால் இவை நடந்திருந்தால் இதன் பெயர் "குடிகாரர்கள் சண்டை". சாலையில் நடந்து செல்லும் இரண்டு பெண்கள் முகத்தைச் சுளித்து நான்கைந்து வார்த்தைகளை துப்பிவிட்டுச் சென்றிருப்பார்கள்.

டாஸ்டாயோவ்ஸ்கியை கடைசி பக்கத்தில் இருந்து படித்தவர்களும், குறட்டை விட்டால் கூட கிப்ரான் வரிகள் மூச்சுக் காற்றில் கலந்து வருகிறது என்றெல்லாம் சொன்னவர்களும், சில பல கதைகளை வக்கனையாக எழுதியவர்களும் இதில் ஈடுபட்டார்கள் என்பதால் இந்த குடிகாரச் சண்டை, இலக்கியச் சண்டையாக மாறிவிட்டது. இந்த உலகம் புனைவுகளால் பின்னப்பட்டது அல்லவா?

இருபத்தைந்து வருடங்களாக தமிழகத்தின் இலக்கிய கூட்டங்களில் குடித்துவிட்டு "நீ எழுதுவது குப்பை" என்றும் "அவன் என் சாதியைச் சொல்லித் திட்டினான்" என்றும் சொல்லிச் சொல்லியே அடித்துக் கொண்டு தங்களின் இலக்கியவாதிகளின் பிம்பத்தை கட்டமைத்த குழுக்களின் வேறு வடிவம் எனக்கு இப்பொழுது வலைப்பதிவுகளில் தெரிகிறது.

குடிப்பவர்கள் நல்ல இலக்கியங்களின் பிதாமகன்கள் என்றமைக்கப்பட்ட இலக்கியச்சூழலில் இருக்கிறோம்.

சரி எனக்கு என் மூக்கு முக்கியம் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
===
வலைப்பதிவில் நிழற்படத்தை மாற்றிவிட்டேன்.

எனக்கு இத்தனை நாட்களாக படத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியதில்லை. நிறையபேர் உனக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று நினைத்திருந்ததாகச் சொன்னபோதும், உன்னிடம் இளைஞனுக்குரிய ஒரு அம்சமும் இல்லை என்று சில நண்பர்கள் நக்கலடித்த போதும், குறைந்தபட்சம் நிழற்படத்தை மாற்றியாவது நான் இளைஞன் என்று நிரூபிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை.

எப்பொழுதுதான் நிருபிப்பது நானும் "யூத்" என்று.

ஜீப்பில் ஏறியாகிவிட்டது.
===
கலாப்ரியா குங்குமத்தில் எழுதிய கட்டுரையை வாசித்தேன். சமீப காலங்களில் தனது பழைய நினைவுளின் தாழ்வாரங்களில் தூசு படிந்து கிடந்தவற்றை புத்தம் புதுசாக எழுதி பட்டையை கிளப்புகிறார். இரண்டாவது கட்டுரை இந்த வாரம் குங்குமத்தில் வந்திருக்கும். இன்னமும் கைகளில் கிடைக்கவில்லை.

வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் நேரத்தை பக்காவாக பயன்படுத்துகிறார் மனுஷன். எழுதிக் குவிக்கிறார்.

31 எதிர் சப்தங்கள்:

சுகுணாதிவாகர் said...

இப்படி பொத்தாம்பொதுவாக பதிவு எழுதுவது என்பது வசதியானதுதான். இலக்கியக் களங்களில் நடந்தது எல்லாம் வெட்டிச்சண்டைகளும் அல்ல. அதை 'நிராகரிக்க முடியாத இலக்கிய ஆளுமைகள்' எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும் மறக்ககூடியதும் அல்ல. ஆளாளுக்கு சொறிந்து கொடுப்பதை விட சண்டை போடுவது எனக்கென்னவோ மோசமான காரியமாகப் படவில்லை. ஆனால் இப்படி நாட்டமை கருத்துக்களை வாசிக்கும்போது மட்டும் தவிர்க்க முடியாமல் எரிச்சல் வருகிறது.

குழலி / Kuzhali said...

:-)

இந்த சிரிப்பான் பதிவுக்கு மட்டுமல்ல... சுகுணாதிவாகரின் பின்னூட்டத்துக்கும் சேர்த்து தான்...

Vaa.Manikandan said...

கொஞ்சம் லேட்டா வருவீங்கன்னு நினைச்சேன். நன்றி சுகுணா.

+ நாட்டாமை கருத்துக்களா? எனக்கு தெரிஞ்ச விஷயம், என் வார்த்தைகளில் இருக்கு. நான் ஏன் அடுத்தவர்களுக்கு நாட்டாமைத்தனம் செய்யணும்?

+ சண்டை போடலாம்தான், எனக்கு ரத்தம் வரும் அளவுக்கு அடிவாங்க கையலாகாது.

+ இலக்கிய கூட்டங்களில் நடந்தது "எல்லாம்" வெட்டிச் சண்டைகள் அல்ல. அதேதான் என் கருத்தும். குடித்து விட்டு நடந்ததெல்லாம் இலக்கியத்தை வளர்த்தெடுத்தவையும் அல்ல.

குழலி / Kuzhali said...

//இலக்கிய கூட்டங்களில் நடந்தது "எல்லாம்" வெட்டிச் சண்டைகள் அல்ல. அதேதான் என் கருத்தும். குடித்து விட்டு நடந்ததெல்லாம் இலக்கியத்தை வளர்த்தெடுத்தவையும் அல்ல.
//
அட்றா சக்கை, அட்றா சக்கை, செம போட்டி பஞ்ச் டயலாக் விடுறதுல

சென்ஷி said...

குடித்து விட்டால் போதை ஏறியபின்பு பேசிவிட்டு மாத்திரம் வந்துவிட முடியுமா மணிகண்டன்.. எழுதிய வார்த்தைகள் மண்டையில் ஏறி மூளையைச் சூடாக்கி விட்டு போதையை இரட்டிப்பாக்கிய காரணத்தால் நிச்சயம் உங்கள் மூக்கிலிருந்தும் சிவப்பு நிறத்தை பார்க்க முடியும் என்றுதான் தோன்ற வைக்கிறது. ஆனால் முதல்ல எடுத்ததும் குத்த மாட்டோம். ஒரு பெக்காச்சும் குடிச்ச பின்புதான் குத்துவோம். காரணம் குடிச்சுட்டு அடிச்சுருக்கோம். ஓக்கே... டன்!

சென்ஷி said...

போட்டோவுல நல்ல யூத்தா இருக்கீங்க மணிகண்டன்..

இப்படி கமெண்ட் போட்டா நாட்டாமைக்கு சொம்பு பிடிக்க காத்திருக்கேன்னு சொல்லுவாங்களோ!

உண்மையான நாட்டாமை said...

குடிக்காம நடந்ததெல்லாம் இலக்கியத்தை வளர்த்து எடுக்கவும் இல்லை....

ஆனா குடிச்சா வாகாவும் வகையாவும் கருத்துக்கள் வந்து விழுது என்பது எனக்கு மட்டும்தானா இல்ல இன்னும் பலருக்குமா?

முகமூடி said...

குத்து விட்டவன், வாங்கியவன், அதை வேடிக்கை பார்த்தவன், மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ட்ரைவர் என்று எல்லார் தரப்பு வாதங்களையும் அலசி ஆராயாமல் எடுத்தவுடனே பொதுபுத்தி கொண்டு அனுதாபம் தெரிவித்தால் நான் கொலைகாரன் என்று முத்திரை குத்தப்பட்டு குடிகார தொடர் இலக்கியங்களை படித்து தொலைக்க நிர்ப்பந்திக்கப்படும் அபாயம் இருப்பதால் - ஒரு வேளை உங்கள் மூக்கு உடைந்தால் நான் அதற்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க இயலாது என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.

Ayyanar Viswanath said...

இரண்டு பியர்களுக்கு மேல் குடித்துவிட்டால்
பழைய காதலிகளுக்குத் தொலைபேசி
இன்னும் அவள் நினைப்பிலேயே இருப்பதாய்
சத்தியம் செய்யலாம்..
உடன் வந்தவனை
ஐ லவ் யூ மச்சி
என குழறலாய் நேசத்தை சொல்லலாம்

என்ன செய்வது?
குடித்த பின்பெழும் நேசங்களை மட்டும்
சொல்லாமலிருக்க முடியவில்லை...

திடீர்னு என் பழைய கவுஜ ஒண்ணு நினைவுக்கு வந்தது அவ்ளோதான் :)

குடிச்சிட்டு இலக்கியம் பேசுறது / வளர்க்கிறது, சணட போடுறது, மூக்க உடைக்கிறது இதெல்லாம் குடிக்கிறவங்களோட பிரச்சின உமக்கு என்ன வே!..

கல்வெட்டு said...

பொத்தாம் பொதுவாகக் கேட்காமல்,


சுகுணா,
இதுவரை தமிழகத்தில் நடந்தேறிய இலக்கியச் சண்டைகளில் தமிழ் நாட்டுக்கு என்ன பயன்? அல்லது சோகால்டு தமிழ் இலக்கியத்திற்கு என்ன பயன்?

பின் நவீனத்துவம் முன் நவீனத்துவம் என்று சிறு பத்திர்க்கைச்சூழலில் சிலருக்கு மட்டுமெ வாசிக்க கிடைத்த புத்தகங்களை அல்லது முல்லர் பவனில் உருவிய சில எழுத்துக்களை வைத்துச் ஜல்லி அடித்தவர்கள் இப்போது இணையத்திற்கு குடிவந்துள்ளார்கள். அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.

**

மேற்கில் நடந்த விசயங்களளை மொழி பெயர்த்து இன்னும் எத்தனை நாளைக்குச் ஜல்லி ?

தமிழகத்தின் இன்றைய சூழ்நிலைகளுக்குத் தேவையான சூழலுக்குத் தோதான புதிய சூத்திரங்களைச் சமையுங்கள் முடிந்தால்.....

//....அவர்கள் வாழ்ந்த நாடு/காலம்/.. போன்றவற்றில் இருந்து பெற்ற உணர்வுகளால் இத்தகைய புதிய காலத்தை கட்டமைக்க அல்லது அது சார்ந்த சிந்தனையை வெளிப்படுத்த கற்றுக் கொண்டர்கள். அதாவது அவர்கள் வாழ்ந்த கால்த்தில் அவர்களின் நிலப்பரப்பில் இருந்த வினைகளுக்கு எதிர்வினையாக அல்லது மாற்றாக சிந்தித்தார்கள், புதியதை உருவாக்கினார்கள். நாமும் நமது மக்களுக்கு இந்தச் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டுமே தவிர , படித்த இரவல் சிந்தனைகளை அப்படியே பேசிக்கொண்டிருப்பதால் ...சமூகத்தை விடுங்கள், அதைப்படித்தவனுக்கே ஒரு பயனும் இல்லை.....//

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

**

இலக்கியப்புண்ணாக்குக்களின் விவாதங்கள்/சண்டைகள் நிஜவாழ்வில் தமிழகத்தில் ஒரு சிறு மாற்றத்தையாவது கொண்டுவந்துள்ளதா?

வந்துள்ளது என்று எதையும் எனக்கு நிரூபிக்க வேண்டாம். நீங்கள் நம்பும் பட்சத்தில் சண்டைகள் வளர எல்லாம் வல்ல டாஸ்மாக்பகவ‌ன் காக்கட்டும்.

கல்வெட்டு said...

//குடித்து விட்டு நடந்ததெல்லாம் இலக்கியத்தை வளர்த்தெடுத்தவையும் அல்ல.//

ம்ம்..குடித்துவிட்டு நடந்ததெல்லாம் யார் இலக்கியப் பிரச்சனை என்றார்கள்?

மணிகண்டன்,
பை த‌ வே வாட் இஸ் இளக்கியம்?

கதை,கவிதை,நடகம்,சினிமா,உரையாடல், மேடைப்பேச்சு....

What is Literature? A Definition Based on Prototypes -Jim Meyer

http://www.und.nodak.edu/dept/linguistics/wp/1997Meyer.PDF


//I should say, then, that literature is a canon which consists of those works in
language by which a community defines itself through the course of its history. It
includes works primarily artistic and also those whose aesthetic qualities are only
secondary.//

இப்படி நிறைய விளக்கங்கள் இது போல பல இடத்தில் ஆங்கில literature வார்த்தைக்கு கிடைக்கிறது.


இப்படி ஏதாவது தமிழ் இணைய இலக்கியவாதிகள் விளக்கம் கொடுத்தால் நல்லது. :-))

இணைய வாதிகள், இதுதான் நாங்கள் சொல்லும் இலக்கியம் அல்லது இதுதான் நாங்கள் சொல்லும் இலக்கியச் சண்டை என்று கோனார் நோட்ஸ் போட்டுவிட்டால் உங்களுக்கு நல்லதோ இல்லையோ எனக்கு நல்லது :-)))

*

கல்வெட்டு said...

//குடித்த பின்பெழும் நேசங்களை மட்டும்
சொல்லாமலிருக்க முடியவில்லை...//

அய்யனார்,
குடிக்காமலேயே நேசத்தைச் சொல்லமுடியும்.
குடிக்காமலேயே பழைய காதலிக்கு, இன்றைய மனைவியின் முன்னாலேயே அனைத்து ஆறுதல் சொல்லலாம். அதுதான் இயல்பு. இயல்பில் முடியாதவன் புனைவில் வாழ்கிறான். :-))))

குடித்த பின் மட்டும் வரும் நேசங்களை குடித்திவிட்டு "ஓபாமாவை ஒண்டிக்கு ஒண்டி" வரச்சொல்லும் வரட்டு சண்டைகள் என்றோ அல்லது பாசாங்கு என்றோ சொல்லலாம்.

கல்வெட்டு said...

அய்யனார்,
//இரண்டு பியர்களுக்கு மேல் குடித்துவிட்டால்
பழைய காதலிகளுக்குத் தொலைபேசி
இன்னும் அவள் நினைப்பிலேயே இருப்பதாய்
சத்தியம் செய்யலாம்..//

10 பீர் குடித்தாலும் xxxxx மாட்டார்கள்.

குடித்தாலும் செலக்டிவ் அம்னீசியா போல செலக்டிவ் ஆக்டிங் மட்டுமே உண்டு.

எத்தனையோ பிக் பாக்கெட்டுகள் , சில்லரை கேசுகள் போலிசில் மாட்டி வெளியில் வந்தபின் நன்றாக குடிப்பார்கள். ஆனால் மறந்தும் போலிஸ் ஸ்டேசனுக்குப் போய் தகராறு செய்ய மாட்டார்கள். அப்படி செய்பவர்கள் பாக்கியவான்கள். :-))

**

குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது சும்ம தமாசு. கடையில் குடித்துவிட்டு எந்தச் சொரணையும் இல்லாமல் நேரடியாக இரு சக்கர வாகனம் ஓட்டும் பலர் உள்ள இடம் இந்தியா.

இப்படிச் சில தமிழக இளக்கிய/நவீன வியாதிகளும் உண்டு.

பொது வாழ்வில் இந்த குறைந்தபடச ஒழுங்கைக்கூட கடைபிடிக்கமுடியாதவர்கள் பக்க‌வாட்டு நவீனத்துவம் பேசும்போது பக்கதில் இருப்பவர்கள் சிரிக்கட்டுமே .நமக்கேன் வம்பு !!

Anonymous said...

நீயே ஒரு லூசு அதை விட நீ இந்த கஸ்மாலத்தை எல்லாம்ல் பேசுவது மிக பெரிய விபத்து

மணிஜி said...

சண்டை இன்னும் தொடரப்போகிறது மணி. ஜீயோவை அடித்தது சரிதான் என்ற மனநிலைக்கு வாசகனை கொண்டு வரும் முயற்சியில் தொடர் பதிவுகள் இட்டு கொண்டிருக்கிறார் ரோசா.(அவர் பதிவில் பின்னூட்டம் மறுக்கப்படுகிறது)

Vaa.Manikandan said...

நன்றிகள்.

அய்யனார்,
//குடிச்சிட்டு இலக்கியம் பேசுறது வளர்க்கிறது, சணட போடுறது, மூக்க உடைக்கிறது இதெல்லாம் குடிக்கிறவங்களோட பிரச்சின உமக்கு என்ன வே!.//
எனக்கு ஒன்றுமில்லை.

குடிப்பதும், குடித்துவிட்டு எழுதுவதும் அடிப்பதும் இலக்கியத்தின் தவிர்க்க முக்கிய அம்சம் போன்ற தோற்றத்தை நம் தமிழ்ச் சூழலில் தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறார்கள் அதை குறிப்பிட்ட என் சுய புலம்பல்.

அனானி,
லூசு எழுதியதை படித்துவிட்டு மெனக்கெட்டு பின்னூட்டமிடும் நீங்கள் எத்தனை பெரிய...... :)

Vaa.Manikandan said...

//இதுவரை தமிழகத்தில் நடந்தேறிய இலக்கியச் சண்டைகளில் தமிழ் நாட்டுக்கு என்ன பயன்?//
இலக்கியச் சண்டையால் தமிழ் இலக்கியத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்று சொன்னால், அதை நான் மறுக்க வேண்டியிருக்கிறது.
தொடர்ச்சியான விவாதங்களும், இலக்கிய ரீதியான மறுதலிப்புகளும், புதிய கோட்பாடுகளை நோக்கி நகர்தலுமே இலக்கியத்தின் உயிர்துடிப்புக்கு அடிநாதமாக இருக்கிறது. இலக்கியத்தின் ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு படைப்பாளிகளையும், படைப்புகளையும் நகர்த்துவதில் இலக்கியச் சண்டைகள் பெரும் பயனளித்திருக்கின்றன.

//பை த‌ வே வாட் இஸ் இளக்கியம்?//
இதுதான் இலக்கியம் என்று வரையறுத்தவிட முடியாது என்பதே என் எண்ணம். என்னைப் பொறுத்தவரை, என்னை புரிந்து கொள்ள, என் மீதான சூழலின் தாக்கத்தை உணர்ந்து கொள்ள உதவும் எந்த எழுத்தும் எனக்கு நல்ல இலக்கியம்.

நல்ல இலக்கியம், ஆகாவழி இலக்கியம் என்ற பகுப்புகள் கூட தனிமனிதனின் ரசனை சார்ந்த செயல்பாடுதான். ஜெயமோகன், சாரு நிவேதிதாவின் எழுத்துக்களை வாசிக்கும் என்னால் பாலகுமாரனை மறுக்க முடியும் என்பது என் தனிப்பட்ட ரசனை. அதற்காக பாலகுமாரனின் படைப்புகள் இலக்கியமே அல்ல என்று என்னால் சொல்ல முடியாது.

கல்வெட்டு said...

மணிகண்டன்,

//நகர்த்துவதில் இலக்கியச் சண்டைகள் பெரும் பயனளித்திருக்கின்றன.//

மசாலா கதை பற்றிய சண்டை மர்மத் தொடர் எழுத உதவி இருக்கலாம். உங்கள் பாணியில் அடுத்த தளத்திற்கு நக‌ர்த்தி இருக்கலாம்.

நான் கேட்பது, நேரடியாக அல்லது மறைமுகமாக சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்று.

ஒரு நல்ல இலக்கியம் நிகழ்கால வரலாற்றை தன்னுள் மறைமுகமாக சேமித்து வைத்து இருக்கும் அல்லது நிகழ்கால சமூகத்தை சிந்திக்கச் செய்து அவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

***

இணையத்தில் பக்கவாட்டு நவீனத்துவம் பேசும் கும்பல் இறக்குமதி செய்த விசயங்களை விடாமல் அசைபோடும் காகிதக் கும்பல் அவர்களால் ஒன்றும் பயனில்லை. பெரியாருக்கு அடுத்து சிந்தைனையாளர்கள் வரவில்லை. பெரியார் இந்த மண்ணுக்காக இசங்களைச் சமைத்தவர். மொழி பெயர்ப்பை வைத்து வெரும் வாயில் ஜல்லி அடித்தவர் இல்லை.

Ayyanar Viswanath said...

கல்வெட்டு

எழுத்தாளான், இலக்கியவாதி, முன் பின் பக்கவாட்டு இசம்கள் எல்லாமே சமூகத்தின் அடிப்படை ஒழுங்குகளை, வாழ்வை, சமச்சீரின்மயை களைந்து தூரக் கடாசிவிட்டு சமூகத்தை மிளிரச் செயவதற்காக மட்டுமே எழுதப்படவேண்டும் என எதிர்பார்ப்பது ஆரோக்கியமானதுதான்.

ஆனால் அப்படி இயங்குவது மட்டுமே இலக்கியம்/படைப்பு, அத் தளத்தில் இயங்குபவர்கள் மட்டுமே இலக்கியவாதிகள் என நம்புவது உங்களின் தனிப்பட்ட நம்பிக்கையாக மட்டும்தான் இருக்க முடியும்.

உண்மையில் இலக்கியவாதி என்பவன் யார்? அவனது கடைமகள் யாவை? சமூகம் இலக்கியவாதிகளால் அடையும் பயன் என்ன? இவர்களின் எழுத்துக்கள் சமூகத்தைப் புரட்டிப்போடும் நெம்புகோலாக இருக்கின்றனவா?பெரியாருக்குப் பின் ஏன் சிந்தனையாளர்கள் தோன்றவில்லை? என்றெல்லாம் முன் வைக்கப்படும் கேள்விகள் என்னுள் பயத்தை ஏற்படுத்துகின்றன.

என்னளவில் இந்த சமூகத்தை மாற்ற மக்களின் வாழ்வை ஒரே இரவில் சம நிலைக்கு கொண்டு வர எழுத்துக்களோ இலக்கியமோ உதவப் போவதில்லை.ஆகவே நீங்கள் அத் தளத்தில் இயங்குபவர்களை தாராளமாகப் புறக்கணியுங்கள்.

ஆனால் எழுத்து வாசிப்பு அயல் மொழிபெயர்ப்புகள் இவைகளால் நம் சமூகத்திற்கு எள்ளளவும் பயனில்லை இத் தமிழ்சமூகம் தானாகவே வளர்ந்துவிட்டது அதை இப்போதும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள் தங்களின் சுயசொறிதலுக்காக மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கைகள் உங்களுக்கு இருந்தால் என்னால் புன்னகைக்க மட்டும்தான் முடிகிறது.

Ayyanar Viswanath said...

குடிப்பதை மிக இழிவாக, குடிப்பவர்களை தீண்டத்தகாதவர்களாக வன்முறையாளர்களாக பார்க்கும் ஒரு நிலை குடிக்காத புனிதர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.குடிக்காதவர்களால் சீரழியும்/வளர்த்தெடுக்கப்படும் இவ்விலக்கிய சமூகம் குடித்தவர்களாலும் நிகழ்த்தப்படுவதில் என்ன சிக்கல் எனப் புரியவில்லை.குடி என்பது அத்தனை கேவலமானதா என்ன?

Vaa.Manikandan said...

அய்யனார்,

குடிப்பது என்பது சமூக சீரழிவு, குடிக்காதவன் புனிதன் என்ற கருத்தை நான் முன்வைக்கவில்லை, வைக்கவும் போவதில்லை. மதுவும், போதையும் சமூகத்தின் ஒரு அங்கம். அவை தவிர்க்க முடியாதவை.

இந்த பதிவில் நான் பேசியதெல்லாம், குடிப்பது நவீன இலக்கிய செயல்பாட்டின் தவிர்க்க முடியாத அம்சம் என்ற மாதிரியாக உருவாக்கப்படும் பிம்பத்திற்கு எதிரான என் கண்டனங்களைத்தான்.அதையும் கூட நீங்கள் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு மட்டும் ஒப்புமைபடுத்த தேவையில்லை.

கல்வெட்டு,

இலக்கியம் சமூகத்தை புரட்டிப் போட வேண்டும் என்று சொல்கிறீர்களா?
அப்படியான புரட்சி இலக்கியம் மட்டுமே இருக்க வேண்டுமானால்,இன்றைய சூழலில் போலியான சமூக சிந்தனைவாதிகள் மட்டுமே இலக்கியம் பேச வேண்டியிருக்கும்.

நல்ல இலக்கியம் என்று நீங்கள் சொல்வது கூட உங்களின் தனிப்பட்ட கருத்துதான். இப்படியிருப்பதுதான் இலக்கியம் என்று நிர்ணயிக்க எவராலும் முடியாது. அவரவர் பாதை அவரவருக்கு.

Pot"tea" kadai said...

சுலுவா சொல்லனும்னா நா அய்னாரு சைடு.

கல்வெட்டு said...

அய்யனார்,

//எழுத்தாளான், இலக்கியவாதி, முன் பின் பக்கவாட்டு இசம்கள் எல்லாமே சமூகத்தின் அடிப்படை ஒழுங்குகளை, வாழ்வை, சமச்சீரின்மயை களைந்து தூரக் கடாசிவிட்டு சமூகத்தை மிளிரச் செயவதற்காக மட்டுமே எழுதப்படவேண்டும் என எதிர்பார்ப்பது ஆரோக்கியமானதுதான்.//


அப்படி யார் எதிர்பார்க்கிறார்கள்?
நிச்சயம் நான் இல்லை.

மிளிர்தல்,ஒழுங்கு,சம்ச்சீர் எல்லாம் இடம்,காலம் சார்ந்து மாறுபடும். உங்களுக்கு ஒழுங்கு என்று தோன்றுவது வேறு நாட்டில் குற்றமாக இருக்கலாம்.

தாக்கம் ஏற்படுத்த வேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன்
அந்த தாக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
எழுத்து ஆற்றலாஉ இருக்க வேண்டும். ஆற்றல் என்பது ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.

*****


//ஆனால் அப்படி இயங்குவது மட்டுமே இலக்கியம்/படைப்பு, அத் தளத்தில் இயங்குபவர்கள் மட்டுமே இலக்கியவாதிகள் என நம்புவது உங்களின் தனிப்பட்ட நம்பிக்கையாக மட்டும்தான் இருக்க முடியும்.//

நான் அப்படி நம்பவில்லை. மேலெ சொன்னதை படிக்கவும்.


//உண்மையில் இலக்கியவாதி என்பவன் யார்? அவனது கடைமகள் யாவை? சமூகம் இலக்கியவாதிகளால் அடையும் பயன் என்ன? இவர்களின் எழுத்துக்கள் சமூகத்தைப் புரட்டிப்போடும் நெம்புகோலாக இருக்கின்றனவா?பெரியாருக்குப் பின் ஏன் சிந்தனையாளர்கள் தோன்றவில்லை? என்றெல்லாம் முன் வைக்கப்படும் கேள்விகள் என்னுள் பயத்தை ஏற்படுத்துகின்றன. என்னளவில் இந்த சமூகத்தை மாற்ற மக்களின் வாழ்வை ஒரே இரவில் சம நிலைக்கு கொண்டு வர எழுத்துக்களோ இலக்கியமோ உதவப் போவதில்லை.ஆகவே நீங்கள் அத் தளத்தில் இயங்குபவர்களை தாராளமாகப் புறக்கணியுங்கள்.//

மறுபடியும் சொல்கிறேன், இலக்கியம் என்பதும் சிந்தனைகள் என்பதும் குறைந்த பட்ச அஜண்டாவுடந்தான் வருகிறது. என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கேட்கிறேன். பொழுதைப் போக்க மட்டும் என்றால் பதில் இல்லை.

*****

// ஆனால் எழுத்து வாசிப்பு அயல் மொழிபெயர்ப்புகள் இவைகளால் நம் சமூகத்திற்கு எள்ளளவும் பயனில்லை இத் தமிழ்சமூகம் தானாகவே வளர்ந்துவிட்டது அதை இப்போதும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள் தங்களின் சுயசொறிதலுக்காக மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கைகள் உங்களுக்கு இருந்தால் என்னால் புன்னகைக்க மட்டும்தான் முடிகிறது.//


நீங்கள் புன்னகைக்க வேண்டாம். எனக்கு அப்படி ஏதும் நம்பிக்கைகள் இல்லை.


****


//குடிப்பதை மிக இழிவாக, குடிப்பவர்களை தீண்டத்தகாதவர்களாக வன்முறையாளர்களாக பார்க்கும் ஒரு நிலை குடிக்காத புனிதர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. //



நான் உங்கள் இலக்கணத்திற்குள் வரும் புனிதன் அல்ல.


//குடிக்காதவர்களால் சீரழியும்/வளர்த்தெடுக்கப்படும் இவ்விலக்கிய சமூகம் குடித்தவர்களாலும் நிகழ்த்தப்படுவதில் என்ன சிக்கல் எனப் புரியவில்லை.குடி என்பது அத்தனை கேவலமானதா என்ன?//

குடிப்பதை யார் கேவலம் என்று சொன்னார்கள்?
நிச்சயம் நான் இல்லை.

*********

அய்யனார்,
குடி சம்பந்தமாக நான் நேரடியாகக் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை.

குடித்தால் மட்டும் உங்களின் காதலிக் கவிதைக்கு பதிலாக நான் சொன்னது.
இதற்கு ஏதாவது பதில் உண்டா?


//////////////////////////// \\\\\\\\\\\\\\\\

அய்யனார்,
//இரண்டு பியர்களுக்கு மேல் குடித்துவிட்டால்
பழைய காதலிகளுக்குத் தொலைபேசி
இன்னும் அவள் நினைப்பிலேயே இருப்பதாய்
சத்தியம் செய்யலாம்..//

10 பீர் குடித்தாலும் xxxxx மாட்டார்கள்.

குடித்தாலும் செலக்டிவ் அம்னீசியா போல செலக்டிவ் ஆக்டிங் மட்டுமே உண்டு.

எத்தனையோ பிக் பாக்கெட்டுகள் , சில்லரை கேசுகள் போலிசில் மாட்டி வெளியில் வந்தபின் நன்றாக குடிப்பார்கள். ஆனால் மறந்தும் போலிஸ் ஸ்டேசனுக்குப் போய் தகராறு செய்ய மாட்டார்கள். அப்படி செய்பவர்கள் பாக்கியவான்கள். :-))

**

குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது சும்ம தமாசு. கடையில் குடித்துவிட்டு எந்தச் சொரணையும் இல்லாமல் நேரடியாக இரு சக்கர வாகனம் ஓட்டும் பலர் உள்ள இடம் இந்தியா.

இப்படிச் சில தமிழக இளக்கிய/நவீன வியாதிகளும் உண்டு.

பொது வாழ்வில் இந்த குறைந்தபடச ஒழுங்கைக்கூட கடைபிடிக்கமுடியாதவர்கள் பக்க‌வாட்டு நவீனத்துவம் பேசும்போது பக்கதில் இருப்பவர்கள் சிரிக்கட்டுமே .நமக்கேன் வம்பு !!


/////////////////////// \\\\\\\\\\\\\\\\

கல்வெட்டு said...

மணிகண்டன்,
//இலக்கியம் சமூகத்தை புரட்டிப் போட வேண்டும் என்று சொல்கிறீர்களா?//

தாக்கம் ஏற்படுத்தாத ஆற்றல் வீண் என்கிறேன்.
என்னவிதமான தாக்கம் என்றும் இதுதான் நான் விரும்பும் தாக்கம் என்றும் சொல்லவில்லை. பொழுதுபோவதற்கு படிக்கும் எழுத்துக்கள், சும்மா லூசுல விடுங்க என்று நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்கிறேன்.

//அப்படியான புரட்சி இலக்கியம் மட்டுமே இருக்க வேண்டுமானால்,இன்றைய சூழலில் போலியான சமூக சிந்தனைவாதிகள் மட்டுமே இலக்கியம் பேச வேண்டியிருக்கும்.//

புரட்சி இலக்கியம்தான் இலக்கியம் என்று நான் சொல்லவில்லை.

// நல்ல இலக்கியம் என்று நீங்கள் சொல்வது கூட உங்களின் தனிப்பட்ட கருத்துதான். இப்படியிருப்பதுதான் இலக்கியம் என்று நிர்ணயிக்க எவராலும் முடியாது. அவரவர் பாதை அவரவருக்கு.//

அதே.
ஆனால் நல்லதோ கெட்டதோ( நல்லதும் கெட்டதும் அவரவர் பார்வையில் மாறும்) தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு ஆற்றல் ஆற்றலே அல்ல. அது வீண் என்கிறேன். அதை நீங்கள் பொழுதுபோக்கு என்று சொன்னால் ஏற்றுக் கொள்கிறேன்.

கல்வெட்டு said...

குடிப்பது பற்றி பொத்தாம் பொதுவாக‌

1.தன்னிலை மறத்தல் அல்லது தளர்வாக இருக்க பல வழிகள் உண்டு.


2.கஞ்சா, சிகரெட்,தியானம்,மது, புணர்தலின் கடைசிக்கட்டம், மூச்சிரைக்க ஒட்டுதல், எதுவும் செய்யாமல் தேமே என்று இருத்தல், மலைச்சறுக்கு விளையாடுதல்.....என்று அடுக்க முடியும். ஒவ்வொருவருக்கும் ஒன்று

3.குடி ஒரு கொண்டாட்டம்.

4.பொண்டாட்டி ஊருக்குப் போனவுடன் மட்டும் குடிப்பதும் அல்லது பொண்டாட்டிக்குத் தெரியாமல் மட்டும் குடிப்பதும் திருமணம் என்ற கமிட்மெண்டிற்கு (உண்மையாய் இருத்தல்) எதிரான குற்றங்கள்.

5.குடித்துவிட்டு அப்படியே வாகனம் ஒட்டுவது , சாலையில் செல்லும் மற்றவர்களின்மீது பிரயோகிக்கப்படும் வன்முறை. இரத்ததில் கலக்கும் ஆல்ககாலின் அளவும் மூளை எடுக்கும் முடிவுகளும் தொடர்புடையவை. உனது கொண்டாட்டம் உனக்கு மட்டுமே.

5.அவன்
"குடிப்பான்" என்பதற்கும் அவன் ஒரு "ஆல்ககாலிக்" என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

குடிப்பது ஒரு கொண்டாட்டம் சார்ந்த பழக்கம்.

ஆல்ககாலிக் ஒரு நோய்.


6.குடித்தால் மட்டும் நான் பழைய பெண் நண்பர்களைப் பற்றிப் பேசுவேன் என‌பது கயமைத்தனம்.
2 பீர் அடித்தால் மற்றபெண் பற்றிப் பேசுபவர்களுக்கு 10 பீர் அடித்தாலும் சைட்டிஸ்சாக எதைச் சாப்பிட வேண்டும் என்ற தீர்க்கமான அறிவு உள்ளது. மறந்தும் xxx சாப்பிடுபவர்கள் நான் அறிந்தவரையில் இல்லை.

Ayyanar Viswanath said...

கல்வெட்டு

எனக்கு குடி மிகுந்த வசதியாகவிருக்கிறது. என் ஈகோ, இறுமாப்பு, தன் முனைப்பு என எல்லாவற்றிலிருந்தும் அத்திரவம் என்னை விடுவிக்கிறது என் நண்பனை என் காதலியை (முன்னாள்/இந்நாள்) குடிக்காமலிருக்கும்போது ஐ லவ் யூ என சொல்ல ஏதோ ஒன்று தடையாகவிருக்கிறது ஆனால் என் சிறுமூளை ஸ்தம்பிக்கும்போது என்னால் இதயத்திலிருந்து பேசமுடிகிறது என் ஆழ்மன ஆசைகளை / வக்கிரங்களை எவ்வித தடையுமில்லாது வெளிப்படுத்த முடிகிறது அதை எப்படி போலி நடிப்பு என வகைப்படுத்துகிறீர்கள் எனப் புரியவில்லை.என் சிறு மூளை செயல்பாட்டில் இருக்கும்போது மட்டுமே நான் நேர்த்தியாக நடிக்கிறேன்.ஆகவே இத்திரவத்தை இப் போதையை நான் கொண்டாடுகிறேன்.

உண்மையின் மீதிருக்கும் வசீகரமே என்னை இவ்வாறு இயங்க தூண்டுவதாக இருக்கலாம். ஆனால் குடிக்காதவர்கள் உண்மைத் தன்மைக்குப் புறம்பானவர்கள் என்பது என் வாதமல்ல எனக்கு இது வசதியாகவிருக்கிறது அவ்வளவுதான்.

குடித்தால் வாகனம் ஓட்டமுடியாது என சொல்வது அல்லது குடிகாரர்களால் மட்டுமே விபத்துக்கள் நேர்கின்றன என சொல்வது பொதுவாய் சொல்லப்படும் ஒன்றாகத்தான் எனக்குப் படுகிறது.சிம்பு போன்றவர்கள் 220 கிமீ வேகத்தில் ஈஸிஆர் சாலையில் வாகனத்தைச் செலுத்துவதாக ஆனந்த விகடன் பத்திரிக்கையில் புளகாங்கிதமாய் சொல்கிறார்கள் அவர்களுக்கு இருக்கும் சொரனையை விட குடிகாரர்களுக்கு சொரணை அதிகமாக இருக்கும் என்பதுதான் என் எண்ணம்.

நவீன படைப்பாளிகளின் அடையாளம் குடியாக இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே வழமைக்கு எதிரான அல்லது புனிதங்களுக்கு எதிரான ஒரு குறியீடாகவே நான் நவீனத்தையும் முன் பின் பக்க வாட்டு இசங்களையும் பார்க்கிறேன். குடியும் வழமைக்கு எதிராகவிருக்குமெனில் அதை நான் வரவேற்கிறேன்.

Vaa.Manikandan said...

//நவீன படைப்பாளிகளின் அடையாளம் குடியாக இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே//

இந்த வாசகத்திற்கு எதிராகத்தான் என் பதிவே. நவீன படைப்பாளிகளின் அடையாளம் குடியில்லை.

குடி நவீனத்தின் அடையாளம் என சிலர் கட்டமைக்க முயல்வதைத்தான் நான் எதிர்க்கிறேன்.

கல்வெட்டு said...

அய்யனார்,

//குடித்தால் வாகனம் ஓட்டமுடியாது என சொல்வது அல்லது குடிகாரர்களால் மட்டுமே விபத்துக்கள் நேர்கின்றன என சொல்வது பொதுவாய் சொல்லப்படும் ஒன்றாகத்தான் எனக்குப் படுகிறது.//

1. குடித்தால் வாகனம் ஓட்டமுடியாது என்று யாரும் சொல்லவில்லை. இரத்த‌தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல்(மருத்துவ அறிவியலில்படி) ஆல்ககால் இருந்தால் வாகனம் ஓட்டக்கூடாது என்பது சட்டம்.

துப்பாக்கி வைத்திருப்பவன் எல்லாம் கொலையாளி அல்ல.
ஆனால் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்து இருக்கக்கூடாது என்பது சட்டம். இதற்குமேலும் விளக்க என்ன இது என்ன கவிதையா அய்யனார்? :-))

2. குடிகாரர்களால் மட்டுமே விபத்துக்கள் நேர்கின்றன என்று சொல்பர்கள் கூமுட்டைகள்.

கவனச்சிதறல் , எதிர்பாரமல் நடத்தல் எல்லாம் விபத்து.

இரத்த‌தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல்(மருத்துவ அறிவியலில்படி)ஆல்ககால் இருக்கும் பட்சத்தில் கவனச்சிதறலுக்கான சாத்தியங்கள் அதிகம்.

3.சிறுமூளை ஸ்தம்பித்த நிலையில்கூட யாரும் அதுவும் உங்களால் தோழியை மட்டும் கவனமாக தேர்ந்தெடுக்க முடிகிறது. 10 பீர் போனாலும் உங்களுக்கு பிடிக்காததைச் xxxx செய்யப்போவது இல்லை. இதுதான் செலக்டிவ் சிறுமூளை ஸ்தம்பிப்பு.

4.சிறுமூளை நல்ல நிலையில் இருக்கும்போதே இதயத்திலிருந்து பேச நிறையசாத்தியங்கள் உண்டு.




**********


//நவீன படைப்பாளிகளின் அடையாளம் குடியாக இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே வழமைக்கு எதிரான அல்லது புனிதங்களுக்கு எதிரான ஒரு குறியீடாகவே நான் நவீனத்தையும் முன் பின் பக்க வாட்டு இசங்களையும் பார்க்கிறேன். குடியும் வழமைக்கு எதிராகவிருக்குமெனில் அதை நான் வரவேற்கிறேன்.//

ஆகா, இப்படிப் போகுதா மேட்டர். :-))


நோபல் பரிசு பெற்றவர்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்பதற்காக குடிப்பவர்கள் எல்லாம் நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள் இல்லை.

* நீங்கள் குடிக்கீறீர்கள்.

* 2 பீர் குடித்தபின் கவனமாக தோழியப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள்.

* 10 பீர் போனாலும் வாழும் இடத்தில் குற்றமாகக் கருதப்படும் ஒன்றை பொதுவெளியில் செய்யத்துணியாத செலக்டிவ் சிறுமூளை ஸ்தம்பிக்கும் கன்ட்ரோல் உள்ளது.

குடிப்பதால் நான் அந்த சைடு ..ஓ ஐயாம் ஹேப்பி ..குடி எனக்கு அந்த கட்டுடைக்கும் அடையாளத்து கொடுத்துள்ளது சொல்வது ..படைப்பு,புனிதம்,வழமை ....என்று சொவது ரொம்பவே ஓவர் அய்யனார்.

குழந்தைகளைப் பெறுவதுகூட நாம் செய்ய்யும் படைப்புத்தான். அனைவரும் செய்கிறார்கள் அனைவருமே படைப்பாளிகள்தான் ஆடுமாடு உட்பட‌.

படைப்பு என்பது சமூகம் நோக்கியது என்பது எனது புரிதல். அது உங்கள் இலக்கணப்படி தவறாகவே இருந்தாலும் திருத்திக்கொள்ள வாய்ப்புக்கிடைக்கவில்லை காத்து இருக்கிறேன்.

உயிரோடை said...

ச‌ரி இனி இல‌க்கிய‌வாதிக‌ள் எல்லாம் குடிக்காம‌ல் இருங்க‌ள். அர‌சின் பொருளாதர‌த்தை நீங்க‌ள் இப்ப‌டி வ‌ள‌ர்க்க‌ வேண்டிய‌தில்லை. க‌லாப்ரியாவின் க‌ட்டுரை ப‌ற்றி த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி.

seethag said...

"குடித்தால் வாகனம் ஓட்டமுடியாது என சொல்வது அல்லது குடிகாரர்களால் மட்டுமே விபத்துக்கள் நேர்கின்றன என சொல்வது பொதுவாய் சொல்லப்படும் ஒன்றாகத்தான் எனக்குப் படுகிறது.சிம்பு போன்றவர்கள் 220 கிமீ வேகத்தில் ஈஸிஆர் சாலையில் வாகனத்தைச் செலுத்துவதாக ஆனந்த விகடன் பத்திரிக்கையில் புளகாங்கிதமாய் சொல்கிறார்கள் அவர்களுக்கு இருக்கும் சொரனையை விட குடிகாரர்களுக்கு சொரணை அதிகமாக இருக்கும் என்பதுதான் என் எண்ணம்."

அய்யனார், குடிக்காமலே விபத்துகள் நடக்கும் போது குடித்து வேறு விபத்து ஏற்படுத்த வேண்டுமா?



"குடிக்காமலிருக்கும்போது ஐ லவ் யூ என சொல்ல ஏதோ ஒன்று தடையாகவிருக்கிறது ஆனால் என் சிறுமூளை ஸ்தம்பிக்கும்போது என்னால் இதயத்திலிருந்து பேசமுடிகிறது என் ஆழ்மன ஆசைகளை / வக்கிரங்களை எவ்வித தடையுமில்லாது வெளிப்படுத்த முடிகிறது "

இதே எண்ணங்களைதான் குடித்துவித்த்உ வண்டியய் வேகமாக ஓட்டுபவர்கள்உம் சொல்லகூடும்?உங்களிடம் இருந்து இந்த பொறுப்பின்மைஅயை எதிர்பார்க்கவில்லை அய்யானார்.குடிப்பது தனிமனித சுதந்திரம்,ஆனால் அதுவே இன்னொருவருடய வாழ்கையை பாதிக்கும் என்றால்?
புள்ளிவிவரகணக்குபடி இந்தியாவில் தான் சாலை விபத்துக்கள் அதிகம்.அதில் பெரும்பன்மை குடித்துவித்து ஓட்டுவதால் வருவது.

மேலை நாட்டிலாகட்டும் ,உங்கள் அமீரகத்திலாகட்டும், வாகனம் ஓட்ட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு.

மற்றபடி, குடித்து விட்டு சண்டை போட்டால் யாரனாலும் அது சண்டை தான். அதில் என்ன ஒரு பெரிய தத்துவம்?
விஸெண்ட் வான்கோவும் ,காகினும் குடித்துவிட்ட்உ போட்ட சண்டை படித்தால் வெறும் சாதாரண சண்டைதான்

ஏஜண்ட் NJ said...

குத்து விட்டவன், வாங்கியவன், அதை வேடிக்கை பார்த்தவன், மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ட்ரைவர் என்று எல்லார் தரப்பு வாதங்களையும் அலசி ஆராயாமல் எடுத்தவுடனே பொதுபுத்தி கொண்டு அனுதாபம் தெரிவித்தால் நான் கொலைகாரன் என்று முத்திரை குத்தப்பட்டு குடிகார தொடர் இலக்கியங்களை படித்து தொலைக்க நிர்ப்பந்திக்கப்படும் அபாயம் இருப்பதால் - ஒரு வேளை உங்கள் மூக்கு உடைந்தால் நான் அதற்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க இயலாது என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்.

;-) Agent NJ!