
காகம் ஒன்று
இடமிருந்து வலமாக
பறந்து கொண்டிருந்த போது
காமத்தின் நித்யத்துவத்தை
சிகரெட்டை வைத்து
நிர்மாணிக்க
முயன்று கொண்டிருந்தான்
நிர்மாணிக்க
முயன்று கொண்டிருந்தான்
மனோ தத்துவ நிபுணன்.
பிளாஸ்டிக் உறைகளாக
சிதறிக் கிடந்த
காமத் துளிகளை
சிவப்புத் துணி
கருப்புக் கொடிகளோடு
பொறுக்கிக் கொண்டிருந்தவன்
சூரியனை கொஞ்சம்
உற்றுப் பார்த்த போது
வெளிச்சத்தை கிழிக்கும்
யமாஹா வொய்.இசட் வண்டியில்
அமர்ந்திருப்பவளின்
அமர்ந்திருப்பவளின்
வெளித் தெரியும் உள்ளாடையிலிருந்து
ஊதாப் பூக்கள்
ஊதாப் பூக்கள்
உதிர்ந்து கொண்டிருந்தன.
இரண்டையும்
பார்த்துக் கொண்டிருந்த
மரங்கொத்தி பறவைக்கு
தெரியலாம்
காமத்தின்
நித்யம் X அநித்யம்.
தன் குழந்தை இறந்ததன்
ஆழ்ந்த துக்கத்திற்கு
தயாராகும் ப்ரனீத்துக்கும்
தெரியலாம்
காமத்தின்
நித்யம் X அநித்யம்.
6 எதிர் சப்தங்கள்:
Super!! நல்லாயிருக்கு..
:).
சிரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வரிசைகள்!
ரசித்தேன்.வாழ்த்துக்கள்!
அன்பின் நண்பருக்கு,
கவிதை நன்றாக வந்திருக்கிறது.
நித்யம் அநித்யம் என்ற வார்த்தைகள் நெருடலாக உள்ளது.
இறுதி வரிகளின் படிமம் உணர்ந்து கொள்வதில் சிரமமாக இருக்கிறது.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நல்லாருக்குங்க.. கடைசி பத்திதான் வெளங்கல
அருமை.
அனுஜன்யா
Post a Comment