
மழை பெய்து
தெளிந்திருந்த வானத்தில்
மூன்று பறவைகள்
பறந்து சென்று கொண்டிருந்தன.
தெளிந்திருந்த வானத்தில்
மூன்று பறவைகள்
பறந்து சென்று கொண்டிருந்தன.
ப்ரனீதா
வேறு ஊருக்குச் செல்வதாகச் சொன்னாள்.
காரணம் எதுவும் சொல்லவில்லை.
புன்னகை
கண்ணீர்
துக்கம்
எதுவுமில்லாமல்
மெளனமாயிருந்தேன்.
நனைந்திருந்த செடியில்
இலைகளை பறித்துக் கொண்டிருந்தவள்-
நேரமாகிவிட்டது
என்று
நகரத் துவங்கினாள்.
மூன்று பறவைகள்
இருந்த இடத்தில்
மேகத்திட்டு
வந்திருந்தது.
2 எதிர் சப்தங்கள்:
நல்லா இருக்கு. மனதை என்னவோ செய்கிறது.
அனுஜன்யா
ரொம்ப நாளைக்கப்புறமா தொடர்ந்து கலக்க ஆரம்பிச்சுட்டீங்க :-))
Post a Comment