Mar 30, 2008

நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வூட்டுல பொண்ணு கட்டுன மாதிரி

கொங்கு நாட்டுச் சொலவடைகள்-I

இந்தச் சொலவடைகள் கொங்குப் பகுதியில் என் அமத்தா தலைமுறையால் இயல்பாக உபயோகப்படுத்தப்பட்டு அடுத்த தலைமுறையில் அருகிப் போனவற்றில் சில.

தற்சமயம் இருபத்தைந்து என்னால் பதிவு செய்ய முடிந்தது. உங்களுக்கு தெரியுமெனில் பதிவு செய்யவும்.

இவற்றில் இருக்கும் இரட்டை அர்த்தங்களை உங்களால் பட்டியலிட முடிந்தாலும் நல்லது.

1. ஆளை நம்புனா அத்துவானம்;மகனை நம்புனா மத்தியானம்
2. சோத்துக்கு இருந்தா பாப்பான்- சொன்ன படியெல்லாம் கேட்பான்.
3. வெண்ணெய் உருண்டு வரையில தாளி உடைஞ்ச கதையாட்டம்.
4. நடக்க மாட்டாதவன் சித்தப்பன் வூட்டுல பொண்ணு கட்டுன மாதிரி
5. ஆறடி நீட்டம்ன்னு ஆட்டம் போட்டானாமா;அவுத்துப் பாத்தா வேப்பிலையாமா
6. நாடறிஞ்ச பாப்பானுக்கு பூணூல் ஒரு கேடா?
7. சோறு முத்துனா சோமாரம்; அரிசி முத்துனா அமாவாசை
8. சுப்பி கிட்ட இருக்குது சூட்சுமம்; சுண்ணாம்பு கிட்ட இருக்குதாமா வேஷம்
9. பிலுக்குதா பிலுக்குதாம் பித்தளை; காசுக்கு ரெண்டு கத்தாழை
10. பண்ணாடி படியில் ஏய்ச்சா,ஆளு நடையில ஏய்க்குறான்
11. உங்கற நாளுல ஊருக்குப் போயி; திங்குற நாளுல தேருக்குப் போன கதை
12. அரைக்காசுக்கு பரதேசம் போகதடா
13. சொம்பும் போச்சுடா கோயிந்தா
14. சுந்தரிக்கு வாக்கப்பட்டவன் எதுல போறாண்டி; சோள அரிசியில பொத்தல் பண்ணி அதுல போறாண்டி
15. வாழமாட்டாதவன் வவானி மேல போறானாம்மா; பொழக்கமாட்டாதவன் பொதன்கெழம சந்தை மேல போறானாமா
16. பொழச்சது பொத்தியாம்பாளையம்; வாழ்ந்தது வள்ளியாம்பாளையம்
17. வெட்டிலைன்னா எங்ககப்பன் பட்டிலன்னு
18. ஏந்தி ஏந்தி வளத்துனாலும் இளையகுடி புள்ள; தாங்கி தாங்கி வளத்துனாலும் தங்கச்சி புள்ள
19. முள்ளிக்கா சோத்துக்கு மூலை ஒண்டி நிக்குறது; கள்ளிக்கா சோத்துக்கு கதவ ஒண்டி நிக்குறது.
20. வாழ்ந்தவன் கெட்டா வல்லி ஓட்டுக்கு ஆக மாட்டான்; பொழச்சவன் கெட்டா பொரி ஓட்டுக்கு ஆவ மாட்டான்
21. பந்தியில உட்காராதீன்னு சொன்னா எலைல ஓட்டைன்னானாமா
22. பருப்பு பதம் கெட்டதாமா; பண்ணாடி சீர் கெட்டதாமா
23. பங்காளி வூட்டுல தீ புடிச்சா குந்தாணி எடுத்து தண்ணி ஊத்து.
24. விடிய விடிய வேங்காத்தா; விடிஞ்சு எந்திரிச்சு தூங்காத்தா.
25. கடஞ்சு எடுத்த பாலுல கொடஞ்சு எடுத்த வெண்ணெய்.

6 எதிர் சப்தங்கள்:

Karthikeyan G said...

Great.... இதற்கு நிறைய உழைப்பு தேவை பட்டிருக்கும். U might have also received the சொலவடை "பொலப்பத்த **********" :)))
but plz தொடருங்கள்.

சொலவடைகள் அல்லங்க ... அதுக்கு நம்மூரு பேரு "செலவந்தரம்"

Karthik S said...

ஆனதுக்கு சொன்னா அறிவும் உண்டு நெனவும் உண்டு ஈனதுக்கு சொன்னா இல்லிடத்த தான் தோத்துட்டு போகணும்.

பொய்யன் said...

enakku antha ~AARADI NEETTU~ solavadathan putchirunthathu. aha enna meaningu enna meeningu.

வேளராசி said...

இதயும் கூட சேத்துக்குங்க.மரம் முத்துனா சேகாய்,மனுசன் முத்துனா குரங்கு. ( முத்தறது-வயதாகுதல் )

cheena (சீனா) said...

அன்பின் மணி கண்டன்

அருமையான தொகுப்பு

அழிந்து கொண்டிருக்கும் பழமொழிகளை ஆவணப்படுத்துதல் நல்ல செயல்

நல்வாழ்த்துகள்

Prabhu Palaniappan said...

நல்லெண்ண வேப்பெண்ண வேளக்கெண்ண பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன