Mar 12, 2008

அவ‌னைப் ப‌ற்றிய‌ குறிப்புக‌ள் - ராஜா ச‌ந்திர‌சேக‌ரின் க‌விதைக‌ள்.

கவிதை வாசிப்பு போதையை ஒத்ததாக இருக்கிறது. இங்கு 'கவிதை'யின் முன்னால் நல்ல என்ற சொல்லினை சேர்த்துப் படிக்கவும். கவிதையில் நல்ல கவிதை கெட்ட கவிதை என்ற பகுப்பினை உண்டாக்குவதற்கான உரிமையை எனக்கு யார் கொடுத்தார்கள் என்பது தருக்க ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய வினாதான்.

சில‌ க‌விதைகள் ப‌டித்து முடிக்கும் போது பெரும் த‌ள‌ர்ச்சியை உருவாக்கிவிடுகின்ற‌ன‌. இந்த‌ த‌ள‌ர்ச்சி க‌விதையை வ‌லிந்து உருவாக்கியிருக்கும் த‌ன்மையினால் வ‌ரும் த‌ள‌ர்ச்சி. தானும் எழுத‌ வேண்டும் என்பதனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வ‌ற‌ட்டு அனுப‌வத்தோடு சொற்க‌ளை திர‌ட்டி வ‌ரிக‌ளை அமைத்துவிடுவதால் உருவாகும் த‌ள‌ர்ச்சி.

யாராலும் 'நானும் க‌விதை எழுதியிருக்கிறேன்' என்று சொல்லி விட‌ முடிகிற‌து. ஆனால் ம‌ன‌தில் தைக்கின்ற‌ அனுப‌வ‌ங்க‌ளையும், காட்சிகளையும் அனுப‌வ‌திற்கும், எழுத்திற்குமான‌ இடைவெளி குறைத்து எத்த‌னை பேரால் எழுத‌ முடிகிற‌து என்ப‌து பெரும் கேள்வி.

க‌விதை என்ற‌ பெய‌ரால் தின‌மும் குறைந்த‌து இர‌ண்டு சொற்க் கூட்ட‌ங்க‌ளையாவ‌து தாண்டி வ‌ருகிறோம்.

அத்திபூத்தாற் போல சந்தோஷமான கவித்துவ அனுபவங்களும் கிடைத்துவிடுவதுண்டு.
-------------------
ராஜா சந்திரசேகரின் கவிதைகள் அத்திப் பூ வகை.

அவரின் க‌விதைக‌ள் த‌ரும் அனுப‌வ‌ம் மனதிற்கு ஒரு வித‌ திருப்தியை உண்டாக்குகின்ற‌ன‌.

மலைகளை வரைபவன்/ஏறிக்கொண்டிருக்கிறான்/கோடுகள் வழியே

என்ற‌ க‌விதையை உள்வாங்கிய‌ நேர‌த்தில் எனக்கு அது எவ்வித‌ ச‌ல‌ன‌த்தையும் உருவாக்க‌வில்லை. பிறகொரு சமயமாக‌ கவிதையின் கரங்கள் பெரும் நெருப்பின் கிளைகளுக்குள் என்னை அழைத்துச் சென்றன‌‌.

படைப்பாளியின் க‌ன‌வுக‌ளும், தீர்க்க‌ முடியாத‌ ஆசைக‌ளும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ க‌விதையாக எனக்கு இது ப‌டுகிற‌து. ஆனால் ப‌டைப்பாளியைப் ப‌ற்றி மட்டுமே பேசும் க‌விதை என்ற‌ தீர்க்க‌மான‌ எல்லைக்குள் அட‌க்க‌ முடியாத‌ வ‌ரிக‌ள் இவை.

வ‌ரைப‌வ‌ன் என்ப‌து ஒரு குறியீடு. இந்த‌க் குறியீட்டை நான் யாருக்கு வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்க‌ முடிகிற‌து. அது ப‌டைப்பாளி, வாச‌க‌ன், மாண‌வ‌ன் என்ற‌ யாராக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம்.

த‌ன் ப‌ணியின் மீதாக‌ உண்டாகும் ல‌யிப்போடு, அடைந்து விட‌ முடியாத‌ ல‌ட்சிய‌ம் ஒன்றினை நோக்கி விருப்ப‌த்தோடு ந‌க‌ரும் த‌ன்மையும் இக்க‌விதையின் உயிர்ப்பாக‌ இருக்கிற‌து.
ப‌டைப்பாளியை மீறி வாச‌க‌னை யோசிக்க‌ வைக்கும் இந்த‌ அம்ச‌திற்காக‌வே நான் இந்த‌க் க‌விதையை கொண்டாடுவேன்.

இன்னுமொரு கவிதை. முந்தைய கவிதையோடு சற்றே தொடர்புடையது.

எல்லா கதவையும்/திறந்து வைத்திருக்கிறாள் சிறுமி/வரைந்த வீட்டில்
---------------
சிதையும் சொற்கள்/மறையும் சூரியன்/கவிதையில் உதிப்பது/அழகாய் இருக்கிறது/ஆனாலும்/சொற்களைச் சிதைக்கிறது/சுள்ளிப் பொறுக்கும் கிழவி/வீடு சேர வேண்டும்/என்ற யோசனை/
கிழவியைப் பின்தள்ளிப்/போகிறது ரயில்/சத்தலயம் பிசகாமல்

இந்த‌க் க‌விதை என்னை ஈர்க்க‌வில்லை.மிக‌ அற்புத‌மான‌ காட்சி ஒளிந்திருக்கும் இந்த‌க்க‌விதையில் சென்டிமெண்ட் துருத்திக் கொண்டிருக்கிற‌து.

சூரிய‌ன் ம‌றைவ‌து ப‌ழைய‌ காட்சிதான் என்றாலும் சுள்ளி பொறுக்கும் கிழ‌வியும், ச‌த்த‌ல‌ய‌ம் பிச‌காத‌ ர‌யிலும் க‌விதையின் ப‌ரிணாம‌த்தை மாற்றுகின்ற‌ன‌.

ஆனால் கிழ‌விக்காக கவிஞன் வ‌ருத்த‌ம‌டைவ‌து தேவையில்லை என‌ப்படுகிற‌து. வெறும் காட்சிப்ப‌டுத்துத‌லோடு நிறுத்தியிருந்தால் ப‌டைப்பாளியின் ப‌ணி முடிந்திருக்கும்.

கிழ‌விக்காக‌ வ‌ருந்துவ‌தும், காட்சியை ர‌சிப்ப‌தும், அடுத்த‌ நிகழ்வு என்ன‌வாக‌ இருப்ப‌து என்ப‌தும் வாசகனின் ர‌சனையை பொறுத்து வடிவம் பெற வேண்டியது. க‌விஞ‌னுக்கு அங்கு அவ‌சிய‌மில்லை.
------------
அவருக்காக/நான் மன்னிப்புக் கேட்டேன்/
எனக்காக/யாராவது கேட்பார்கள்/தவறுகள் சுற்றித்திரியும்/பயமற்று.

இங்கு இய‌ல்பான உண்மை ஒன்று க‌விதையின் விர‌ல்க‌ளைப் ப‌ற்றிகொண்டு ம‌ன‌திற்குள் சுற்ற‌ ஆர‌ம்பிக்கிற‌து.

இந்த‌ உல‌கின் பிர‌ம்மாண்ட‌த்தில் இருண்மையும்,இருளுமே பெரும்பான்மையாக வியாபித்திருக்கிற‌து. ப‌டைப்பாளி என்பவன் சிறு கை விள‌க்கை ஏந்திக் கொண்டு உண்மையைத் தேடி அலைப‌வ‌னாக‌ இருக்கிறான். அவ‌ன் உண்மையை அடையாள‌ம் காண்கிறான் அல்ல‌து இருளின் மீது சிறு வெளிச்ச‌த்தை வீச‌ச் செய்து வாச‌க‌னை உண்மையைக் க‌ண்ட‌றிய‌ச் சொல்கிறான்.

இக்க‌விதையில் க‌விஞ‌ன் நேர‌டியாக‌ உண்மையைச் சொல்லிவிடுகிறான்.
மிக‌க் க‌ச்சிதமாக‌ அமைந்த‌ க‌விதை என்று இத‌னைச் சொல்வேன்.
---------------
மிக‌ச் சிற‌ந்த‌ க‌விதைக‌ள் சில‌வ‌ற்றையும், மிக‌ச் சிற‌ந்த‌ க‌விதைக்குரிய‌ அம்ச‌த்தோடு சுமாரான‌ க‌விதைகள் சிலவற்றையும் ப‌டைத்து வ‌ரும் ராஜா ச‌ந்திர‌சேக‌ரின் க‌விதைக‌ளின் பெரும் ப‌ல‌மாக‌ க‌விதைக‌ள் த‌ரும் காட்சிக‌ளும், வித‌மான‌ அனுப‌வ‌ங்க‌ளும் இருக்கின்றன‌.

பெரும் ப‌ல‌வீன‌மாக‌ க‌விதையில் க‌விஞ‌ன் பேசிவிடுவ‌தாக இருக்கிற‌து.
அய‌ற்சியூட்டாத‌ இவரின் க‌விதைகள் என‌க்கு இத‌ம் த‌ருப‌வையாக‌ இருக்கின்ற‌ன‌.

6 எதிர் சப்தங்கள்:

தருமி said...

இந்தச் சிறு திறனாய்வு அக்கவிதைகள் பற்றிய புதிய பாதைகளை, பரிமாணங்களைக் காண்பிக்கின்றன.

அவர்து கவிதைப் பதிவுகளுக்கு ஒரு தொடுப்பும் கொடுத்திருந்தால் நன்றாயிருந்திக்குமே...

Karthikeyan G said...

/// அவருக்காக/நான் மன்னிப்புக் கேட்டேன்/
எனக்காக/யாராவது கேட்பார்கள்/தவறுகள் சுற்றித்திரியும்/பயமற்று.

இங்கு இய‌ல்பான உண்மை ஒன்று க‌விதையின் விர‌ல்க‌ளைப் ப‌ற்றிகொண்டு ம‌ன‌திற்குள் சுற்ற‌ ஆர‌ம்பிக்கிற‌து. ///

நாம் பிறருக்காக மன்னிப்பு கேட்பதும், பிறர் நமக்காக மன்னிப்பு கேட்பதும் இயல்பாக நடக்க கூடியதா ??
எனக்கு அப்படி தோன்றவில்லை.
இது மெகா சீரியல்களிலும் தமிழ் சினிமாவிலிலும் மட்டும் இயல்பாக நடக்கும். இப்படி செயற்கையாக/ அபூர்வமாக நடக்கும் ஒன்றை பற்றி கூறும்போது அது நம்முடன் மிக நெருக்கமாக ஒன்ற மறுக்கிறதே...

//// இந்த‌ உல‌கின் பிர‌ம்மாண்ட‌த்தில் இருண்மையும்,இருளுமே பெரும்பான்மையாக வியாபித்திருக்கிற‌து. ப‌டைப்பாளி என்பவன் சிறு கை விள‌க்கை ஏந்திக் கொண்டு உண்மையைத் தேடி அலைப‌வ‌னாக‌ இருக்கிறான். அவ‌ன் உண்மையை அடையாள‌ம் காண்கிறான் அல்ல‌து இருளின் மீது சிறு வெளிச்ச‌த்தை வீச‌ச் செய்து வாச‌க‌னை உண்மையைக் க‌ண்ட‌றிய‌ச் சொல்கிறான். ///

எதோ ஒரு நீண்ட கவிதையின் நடுவே அலங்காரத்துக்காக சேர்க்கப் பட்ட வரியை போல் தோன்றும் இதை மிக சிறந்த கவிதையாக மாற்ற எவ்ளோ Build up தேவைப்படுகிறது. .

Regards,
Karthikeyan

Vaa.Manikandan said...

நன்றி தருமி.

ராஜாவின் வலைப்பதிவுக்கு எனது பதிவில் இணைப்பு இருக்கிறது.

கார்த்தி,

உங்க‌ளின் க‌விதை குறித்த‌ பார்வை என‌க்கு மிகுந்த‌ ம‌கிழ்ச்சியைத் த‌ருகிற‌து. இந்த‌க் க‌விதையின் இய‌ல்பான‌ உண்மை என்ப‌து "த‌வ‌றுக‌ள் சுற்றித் திரியும்/ப‌ய‌ம‌ற்று" என்ற‌ வ‌ரிக‌ள்.

க‌விதை மிக‌ அற்புத‌மான‌/உன்ன‌த‌மான‌ க‌ண‌ம் ஒன்றினை த‌ன்னுள் வைத்திருக்க‌லாம் அல்ல‌து சாதார‌ண‌ க‌ண‌ம் ஒன்றினை இய‌ல்பாக‌ச் சொல்லிச் செல்லலாம்.

ந‌ம‌க்காக‌ பிறர் ம‌ன்னிப்புக் கேட்ப‌து என்ப‌து எல்லா த‌ருணங்க‌ளிலும் நிக‌ழ்ந்து விடுவ‌தில்லை.வாழ்வில் மிக‌ அரிதான ம‌ணித்துளிக‌ள் அவை. இந்த வரிகள் சொல்லும் தொனியில் இயல்பாக இருப்பினும் இந்த நோக்கில் பார்க்கும் போது அவை ஆழ்ந்த கவிதானுபவமாக அமைகின்றன.

//எதோ ஒரு நீண்ட கவிதையின் நடுவே அலங்காரத்துக்காக சேர்க்கப் பட்ட வரியை போல் தோன்றும் இதை மிக சிறந்த கவிதையாக மாற்ற எவ்ளோ Build up தேவைப்படுகிறது. . //

இதனை எதற்காக குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. அவை கவிதையின் வரிகள் இல்லை. அவற்றை கவிதையாக மாற்ற வேண்டிய அவசியம் இங்கே எதற்கு வந்தது?

Karthikeyan G said...

//// இந்த‌ உல‌கின் பிர‌ம்மாண்ட‌த்தில் இருண்மையும்,இருளுமே பெரும்பான்மையாக வியாபித்திருக்கிற‌து. ப‌டைப்பாளி என்பவன் சிறு கை விள‌க்கை ஏந்திக் கொண்டு உண்மையைத் தேடி அலைப‌வ‌னாக‌ இருக்கிறான். அவ‌ன் உண்மையை அடையாள‌ம் காண்கிறான் அல்ல‌து இருளின் மீது சிறு வெளிச்ச‌த்தை வீச‌ச் செய்து வாச‌க‌னை உண்மையைக் க‌ண்ட‌றிய‌ச் சொல்கிறான். ///

இது
""""அவருக்காக/நான் மன்னிப்புக் கேட்டேன்/
எனக்காக/யாராவது கேட்பார்கள்/தவறுகள் சுற்றித்திரியும்/பயமற்று."""""
என்ற சாதாரண கவிதை வரிகளுக்காக கவிக்கு கிடைத்த அதிகபடியான பாராட்டு
என தோன்றியது. SO Heavy Build up கொடுத்து HYPE உண்டாக்கி இருப்பதால் அப்படி சொன்னேன்.

More over his other poems looks good as you said.

Regards,
Karthikeyan

Vaa.Manikandan said...

நல்ல கவிதைக்கு எந்த வித பில்ட்‍ அப் அல்லது ஹைப் தேவையில்லை கார்த்திகேயன்.

அப்படித் தர வேண்டிய அவசியமும் எனக்கு இருப்பதாகத் தோன்றவில்லை.

உங்களுக்கு அவை சாதாரண வரிகள் என்று தோன்றும் போது மற்றவரின் புகழ்ச்சி பில்ட் அப் ஆக தெரிகிறது. இது சாதாரண விஷயம்தான்.

அவரவர் ரஸனை அவரவருக்கு. இல்லையா?

கவிதை குறித்த விவாதத்தை தொடங்கிய தங்களுக்கு நன்றிகள்.