Jan 31, 2008

டாடா கன்சல்டன்ஸி நிறுவனமும் ஊதிய வெட்டும்

தனது ஊதிய வெட்டு என்னும் நடவடிக்கையால் டி.சி.எஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மட்டுமன்று மென்பொருள் துறையில் இருக்கும் பெரும்பான்மையானவர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

டி.சி.எஸ் நிறுவனம் 2008 ஆம் ஆண்டின் மூன்றாவ‌து காலாண்டில்(அக்டோப‌ர்‍ முத‌ல் டிச‌ம்ப‌ர் வ‌ரை)ஆயிர‌த்து முந்நூற்று முப்ப‌த்தொரு கோடிக‌ள் இலாப‌ம் ஈட்டியிருக்கிற‌து. இருந்த‌ போதும் இலக்காக நிர்ண‌யிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ருவாயை அடைய‌ இய‌ல‌வில்லை என்று ஊதிய‌த்தைக் குறைத்திருக்கிறார்க‌ள்.

டிசிஎஸ்ஸில் ம‌ட்டுமில்லாது பொதுவாக‌ அனைத்து மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளிலும் ச‌ம்ப‌ள‌த்தில் இர‌ண்டு கூறுக‌ள் இருக்கும். அடிப்ப‌டை,வீட்டு வாட‌கைப் ப‌டி, ம‌ருத்துவ‌ப் ப‌டி போன்று மாறாத‌ கூறு ஒன்றும், 'வேரிய‌பிள் பே' என்று மாறக் கூடிய‌ ஒரு கூறும் உண்டு.

இர‌ண்டாவ‌து கூறு நிறுவ‌னத்தின் வ‌ருமான‌த்தை பொறுத்து மாறும்ப‌டியாக‌ இருக்கும்.இதில்தான் வெட்டு விழுந்திருக்கிற‌து.

டால‌ர் ம‌திப்பு வீழ்ச்சிய‌டைவ‌த‌னால் நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ன் வ‌ருவாயை இழ‌ந்து வ‌ருவ‌தாக‌த் தெரிவிக்கின்ற‌ன‌. ஒரு இந்திய‌ நிறுவ‌ன‌த்தின் ப‌ணியாள‌ர் வெளிநாட்டு நிறுவ‌ன‌த்திற்காக‌ ப‌ணியாற்றும் போது வெளிநாட்டு நிறுவ‌ன‌ம் ப‌ணியாள‌ரை அனுப்பிய‌ நிறுவ‌ன‌த்திற்கு டால‌ரில் ப‌ண‌ம் கொடுக்கும்.

ஒரு ப‌ணியாள‌ருக்கு ஒரு நாளைக்கு 100 டால‌ர்க‌ள் என்று க‌ண‌க்கிட்டால் ஒரு ஆண்டுக்கு முன்பாக கிடைத்த‌ தொகை 4500 இந்திய‌ ரூபாய்க‌ள்.(அப்பொழுது 1 டால‌ர்=45 ரூபாய்).
இது இப்பொழுது ரூ.3900 ஆக‌ மாறி இருக்கும். ஒரு ப‌ணியாள‌ருக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாயை இந்திய‌ நிறுவ‌ன‌ம் இழ‌க்கிற‌து.

இது பெரும் இழ‌ப்பாக‌த் தெரிந்தாலும், இந்திய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ஒரு ஆளை வைத்துச் செய்வ‌தாகச் சொல்லி, மூன்று ஆட்க‌ளை ப‌ணிக்கு அம‌ர்த்தியிருக்கின்ற‌ன‌. ஆளுக்கு 15 டாலர்க‌ளை ச‌ம்ப‌ளமாக‌ கொடுத்துவிட்டு, 55 டால‌ர்க‌ளை நிறுவ‌ன‌ம் வைத்துக் கொள்வ‌து ந‌ட‌ந்து வ‌ந்த‌து.

இன்று அதே மூன்று பேர்க‌ளை வைத்து அந்த‌ப் ப‌ணியை முடித்தால் 45 டால‌ர்க‌ள் கொடுக்க‌ வேண்டியிருக்கும். கிடைத்து வ‌ந்த‌ 55 டால‌ரின் ம‌திப்பு குறைந்துவிட்ட‌து. இந்த இழப்பை சரி கட்டுவதற்காக அவ‌ர்க‌ளுக்கு சில‌ வ‌ழிக‌ள் இருக்கின்ற‌ன‌.

மூன்று பேரை இர‌ண்டு பேர் ஆக்குவ‌து, கொடுக்கும் ச‌ம்ப‌ள‌த்தில் வெட்டு போன்ற‌வை சில‌ முறைக‌ள்.

அல்ல‌து வெளிநாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளிட‌ம் 100 டால‌ர் வாங்கிய‌த‌ற்கு ப‌திலாக‌ 125 டால‌ர்க‌ள் வாங்குவ‌து. இதில் பேராப‌த்து காத்திருக்கிற‌து. ஏற்க‌ன‌வே அமெரிக்க‌ப் பொருளாதார‌ம் வீழ்ச்சிய‌டைந்து வ‌ரும் நிலையில் த‌ங்க‌ளுடைய‌ மென்பொருள் சார்ந்த‌ ப‌ணிக‌ளுக்காக‌ இவ்வ‌ள‌வு தொகையினை செல‌விட‌ வேண்டுமா என‌ அமெரிக்க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் நினைக்க‌லாம்.

அல்ல‌து அதே ப‌ணியினை 75 டால‌ர் க‌ண‌க்கில் முடித்துக் கொடுக்க‌ சீனா,பிரேசில் போன்ற‌ நாடுக‌ளின் சாப்ட்வேர் நிறுவ‌ன‌ங்க‌ள் காத்திருக்கும் போது அவ‌ர்க‌ளை நாட‌லாம்.

மூன்று பேரை இர‌ண்டு பேர் ஆக்குவ‌தும், ச‌ம்ப‌ளத்திற்கு க‌டிவாளமிடுவ‌தும் மிக‌ விரைவில் தொட‌ங்கும். இதுவரை வார‌த்திற்கு நாற்ப‌து ம‌ணி நேரப் ப‌ணி என்ப‌து நாற்ப‌தெட்டு ம‌ணி நேர‌மாக‌லாம். அத‌ற்காக‌ ச‌னிக்கிழ‌மை வேலை நாளாக‌லாம்.

வேலையிழ‌ப்பு என்ப‌து த‌ற்ச‌ம‌ய‌த்தில் ப‌ய‌ப்ப‌டும‌ள‌விற்கு இல்லை என்றே தோன்றுகிற‌து. இதுவ‌ரையிலும் இந்திய‌ மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ள் அமெரிக்க‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வே பெரும்பாலும் ப‌ணி புரிந்திருக்கின்றன. இன்ன‌மும் ஐரோப்பிய‌ ச‌ந்தையில் பெரும் வெற்றிடம் இருக்கிறது. இந்தியாவின் பிற‌ நிறுவ‌ன‌ங்க‌ள்(உற்ப‌த்தி,விற்பனை) மென்பொருளைப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் ஆர்வ‌ம் காட்டுமேயானால் இந்திய‌ச் ச‌ந்தையும் மிக‌ப்பெரிதாக‌ இருக்கும்.

என்னைப் பொறுத்த‌வ‌ரைக்கும் இன்னும் ப‌த்தாண்டுக‌ளுக்கு மென்பொருள் துறை ந‌ன்றாக‌ இருக்கும். ஆனால் இந்திய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் உல‌க‌ அள‌வில், குறிப்பாக‌ சீன மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளை எப்ப‌டி எதிர் கொள்ள‌ப் போகின்ற‌ன‌ என்ப‌திலும் அமெரிக்கா த‌விர்த்த‌ பிற‌ நாட்டுச் ச‌ந்தைக‌ளை எவ்வாறு பிடிக்க‌ப் போகின்ற‌ன‌ என்ப‌திலும் இருக்கிற‌து.

7 எதிர் சப்தங்கள்:

அனுசுயா said...

//குறிப்பாக‌ சீன மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளை எப்ப‌டி எதிர் கொள்ள‌ப் போகின்ற‌ன‌ என்ப‌திலும் அமெரிக்கா த‌விர்த்த‌ பிற‌ நாட்டுச் ச‌ந்தைக‌ளை எவ்வாறு பிடிக்க‌ப் போகின்ற‌ன‌ என்ப‌திலும் இருக்கிற‌து//

நல்ல கருத்து. பொதுவாக எந்த துறையிலும் ஏற்ற இறக்கம் உண்டு. ஆனால் அதை எப்படி சரி செய்வது என்ற தொலை நோக்கு திட்டம் இருந்தால். திண்டாட்டம் குறையும் . :)

Anonymous said...

Well, That's TCS for you!! (Make money from the employee - is their SLOGAN!!)

BTW, do you REALLY think the software industry can sustain this growth for 10 MORE years?!! I SERIOUSLY DOUBT it!! (The dollars are already floating back to the american shores for the fear of recession!!)

I also think that it's good for general indian public who can not BUY anything at a reasonale (especially houses) price right now - thanks to US, the GREAT SOFTWARE INDUSTRY people!! In all the big cities (including Coimbatore!!) the house prices are OVER-INFLATED to about 40-50%, I think! (Just like it used to be in California - that's why there are 800% more FORCLOSURES this year!!)

It's a cycle - has to even out someday. China can not sustain this with weakening dollar (because already they charge too little compared to Indian companies!).

That's my take on it!!

Anonymous said...

//அல்ல‌து அதே ப‌ணியினை 75 டால‌ர் க‌ண‌க்கில் முடித்துக் கொடுக்க‌ சீனா,பிரேசில் போன்ற‌ நாடுக‌ளின் சாப்ட்வேர் நிறுவ‌ன‌ங்க‌ள் காத்திருக்கும் போது அவ‌ர்க‌ளை நாட‌லாம்.//

As a person being worked with atleast 20 different nationalities, I know that Indians have one "trait" (which others don't possess) that'll never deprive them of the services job.

// இதுவரை வார‌த்திற்கு நாற்ப‌து ம‌ணி நேரப் ப‌ணி என்ப‌து நாற்ப‌தெட்டு ம‌ணி நேர‌மாக‌லாம். அத‌ற்காக‌ ச‌னிக்கிழ‌மை வேலை நாளாக‌லாம்.//

It was contemplated for a while already but not pushed hard anyway. Reason being, productivity will be same on Saturday only when customer interaction also happens on Saturday but that is not the case. Our folks know how to dodge this arrangement by swiping in and out on Saturday and doing their personal work. Why would companies pay full day salary for 50% productivity. Further, it may compensate for a dollar slide to Rs 38. What will the orgs do if dollar slide to Rs 34 or Rs 30? Would they ask employees to work on sunday as well?

//
என்னைப் பொறுத்த‌வ‌ரைக்கும் இன்னும் ப‌த்தாண்டுக‌ளுக்கு மென்பொருள் துறை ந‌ன்றாக‌ இருக்கும். ஆனால் இந்திய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் உல‌க‌ அள‌வில், குறிப்பாக‌ சீன மென்பொருள் நிறுவ‌ன‌ங்க‌ளை எப்ப‌டி எதிர் கொள்ள‌ப் போகின்ற‌ன‌ என்ப‌திலும் அமெரிக்கா த‌விர்த்த‌ பிற‌ நாட்டுச் ச‌ந்தைக‌ளை எவ்வாறு பிடிக்க‌ப் போகின்ற‌ன‌ என்ப‌திலும் இருக்கிற‌து.
//
Again, I'm hearing of Chinese domination from year 1998, 1999 that it will overtake india in few years. China can make/force citizens to do manual labour but it is difficult to make them "learn" english or logic or thinking in grownup adults. Just seeing the "china dominance" goalpost keep shifting every now and then. Doesn't mean that we need to be lethargic anyway.

//It's a cycle - has to even out someday. China can not sustain this with weakening dollar (because already they charge too little compared to Indian companies!).//

They have a controlled dollar conversion rate against their currenct Rinminbi and US Fed is pressurring China to ease it further as there is a heavy BOP in favor of China. Further, Chinese local employee cost is slightly more than India already. And in any growing economy, it will hardly go down, unless Indian employee cost overtakes that of Chinese due to Indian employee greed. China too have a big local market to look after and may take a while to focus externally.

Karthikeyan G said...

i could remember a line from Pitchamoorthy
"Kaatu vaathu agi siragai viri.."

Lets face everything as it goes :)

Karthik S said...

New template and new look. Looks great :-)

Karthik S said...

New template and new look. Looks great :-)

Anonymous said...

//நல்ல கருத்து. பொதுவாக எந்த துறையிலும் ஏற்ற இறக்கம் உண்டு. ஆனால் அதை எப்படி சரி செய்வது என்ற தொலை நோக்கு திட்டம் இருந்தால். திண்டாட்டம் குறையும் . //

அனுவின் கருத்தே என் கருத்தும்.