Dec 28, 2007

இரவினை கவ்வித் திரியும் கரும்பூனை

தனித்த இரவொன்றில் வேகுவதாகச் சொன்னேன்
உற்றுப் பார்த்தீர்கள்.

காரணம் தெரியாமல் கசங்குவதாகப் புலம்பினேன்
சிகரெட் பற்ற வைத்தீர்கள்.

வெறுமை கொடூரமானது என்றேன்
புகையினை அலாதியாக வெளியேற்றினீர்கள்.

வறண்ட கழிவறையில் அலையும் எறும்பு
நானென்றேன்.

சிரித்துக் கொண்டிருந்தீர்கள்-
தன் இரவினை
இலாவகமாக
கவ்வித் திரியும்
கரும்பூனையொன்றினை பார்த்துக் கொண்டே.

2 எதிர் சப்தங்கள்:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு கவிதை.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

தனிமையும் - தன்னுள்ளே யோசிக்கும் மனமும் பதில்களுக்கு காத்திருப்பதில்லை ... நீண்ட இரவுகளும், விடிந்த பின்னரும் தொடரும் கனவுகளும் போல...