Nov 2, 2007

என் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன்.

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் மற்றும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோர்கள் வீர மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த துக்கத்தையும் அளிக்கிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்களோடு என் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஈழச் சகோதரர்களுக்கு என் ஆறுதல்கள் உரித்தாகுக.

ம‌ர‌ண‌ம் ஏற்க‌விய‌லாத‌ துன்ப‌ம் என்ற‌ போதிலும் த‌மிழ்ச் ச‌கோத‌ர‌ர்க‌ள் ஈழ‌த்தில் த‌ங்க‌ளின் ந‌ம்பிக்கையையும், போராட்ட‌ குண‌த்தையும் இம்மிய‌ள‌வும் இழ‌ந்துவிட‌க்கூடாது என‌ விரும்புகிறேன்.

விழும் ஒவ்வொரு வீர‌னும் வேறொரு வ‌டிவ‌த்தில் எழுவ‌துதான் போரின் வெற்றி சூட்சும‌ம் ந‌ண்ப‌ர்க‌ளே.

வீரவணக்கம் தோழர்களே.

10 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

very bad news....sariyana kavalai

Kasi Arumugam said...

ஆழ்ந்த அஞ்சலி! போராட்டம் இன்னும் முனைப்போடு செலுத்தப்படுவதே வீரருக்குச் செய்யப்படும் மரியாதை.

thiru said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

தமிழீழ மக்கள் திரு. தமிழ்ச்செல்வன் அவர்களது இழப்பினால் மனம் தளராது, அவரது ஆளுமையினால் இன்னும் மன உறுதி பெறுவது அவசியம். தமிழீழ போராட்ட வரலாறு இப்படிப்பட்ட இழப்புகளும், வலிகளும், துயரங்களும் நிறைந்த இலட்சிய பாதை. திரு.தமிழ்ச்செல்வனது இலட்சிய கனவு தமிழீழம் விரைவில் மலரட்டும்.

சலம் said...

இது நிச்சயம் பேரிழப்பு.ஆனால் எம்முடைய வெப்பம் இன்னும் அதிகமாகும் என்று அவர் கூறியதை அனைவரும் நினைவு கூறும் நேரமிது.என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Mayooran said...

தான் ஆடவிட்டாலும் தம் தசை ஆடும் என நிரூபித்த தொப்புள் கொடி உறவுகளுக்கு நன்றிகள்.

Anonymous said...

//தமிழ்ச்செல்வனின் புன்னகையை தங்கள் முகங்களில் சுமந்து களம் நிற்பர் புலிகள்; மீட்பர் தேசம் தனை//

நிச்சயமாக.....

Anonymous said...

தே...பையன் எவன் துப்புக் கொடுத்தான் என்று தெரியவில்லை

Anonymous said...

நன்றி மணிகண்ண்டன். எங்கள் தாய்த் தமிழ் நாட்டின் உணர்வுகளை பிரதி பலிக்கிறீர்கள். கலைஞர் திருமாவளவன் வைகோ குளத்தூர்மணி மருத்துவர் வீரமணியென்று உங்கள் தலைவர்கள் வார்த்தைகள் எமக்கு உயிர் தருகிறது

/வ.ஐ.ச.ஜெயபாலன்

Shanmugampillai Jayapalan ஜெயபாலன் V.I.S.Jayapalan said...

நன்றி மணிகண்ண்டன். எங்கள் தாய்த் தமிழ் நாட்டின் உணர்வுகளை பிரதி பலிக்கிறீர்கள். கலைஞர் திருமாவளவன் வைகோ குளத்தூர்மணி மருத்துவர் வீரமணியென்று உங்கள் தலைவர்கள் வார்த்தைகள் எமக்கு உயிர் தருகிறது
/வ.ஐ.ச.ஜெயபாலன்

Vaa.Manikandan said...

திவாகர் என்பவரின் பின்னூட்டத்தை மட்டுறுத்துகிறேன்.

ஆபாசமானதாகவோ,தவறாகவோ இல்லையென்ற போதும் பிரசுரிக்க தேவையில்லை என நினைக்கிறேன்.