Dec 13, 2006

கரட்டடிபாளையம்

கரடு(சிறு குன்று)+அடி+பாளையம். வெள்ளிமலைக் கரடுக்கு கீழாக இருக்கும் ஊர். வெள்ளிமலைக் கரடு இப்பொழுது கோபி கலைக் கல்லூரி ஆகிவிட்டது.

ஒரு ஊர் பட்டணமாகவும் இல்லாமல், பட்டிக்காடாகவும் இல்லாமலிருப்பது சுகானுபவம். என் ஊர் அப்படித்தான். கோபியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்தால் கிராமப்புறத்தின் எல்லை எங்கள் ஊரிலிருந்து ஆரம்பிக்கும்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

மாரியாத்தா கோயில் மட்டும் ஏழு இருக்கு. ஒவ்வொரு சாதி/பகுதிக்கும் ஒவ்வொன்று என. மழை வேண்டிய அவசியமே இல்லை. பவானி ஆற்றின் பாசனத்தை வைத்துதான் ஊரின் பொழப்பு ஓடுகிறது. மழை தேவையில்லாத ஊருக்குள் எதற்கு ஏழு மாரியாத்தா என்று தெரியவில்லை.

அந்தக் காலத்தில் ஆண்டு முழுவதும் சேர்த்த காசை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவர்கள் கம்பம் வெட்டி வருவதாகச் சொல்லி வருடம் தவறாமல் ஏழு மரத்தை வெட்டுகிறார்கள். இருக்கட்டுமே. எவ்வளவு சந்தோஷம் அந்த ஏழு நாட்களும்? மரத்திற்கா பஞ்சம்?

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

வயலில் நெல், மஞ்சள் அல்லது வாழை பயிரிடுவார்கள். எருமை மாடு மேய்க்க ஆட்கள் இருப்பார்கள். ஊரில் கவுண்டர்கள் அதிகம். இப்பொழுது இங்கும் Floating Population வந்து ஊர் பிய்ந்து தொங்க ஆரம்பிக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் கவுண்டர்கள் என்றால் படு ஜம்பப் பேர்வழியாக இருப்பார்கள். இரட்டை மாட்டு வண்டி, வேலைக்காரன், பண்ணையத்தாளு, சமையல்காரன் என.

ஒரீரு வருடங்களுக்கு முன்னர், பவானி கண்ட வறட்சியில் அரண்டு போன கவுண்டர்களின் வாரிசுகள் தாங்களே மாடு ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

நரம்பு கட்டி கவுண்டர்கள், வன்னியர், தாழ்த்தப்பட்டோர் என ஊருக்குள் கலந்து இருக்கிறார்கள்.

அட இந்த புராணம் எல்லாம் எதுக்குங்க? படத்தைப் பாருங்க! எப்படி நம்ம ஊரு? எனக்கே பெருமையா இருக்குங்க. :)

இந்தப்படங்கள் எல்லாமே கரட்டடிபாளையம் மட்டும்தான்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

நண்பர் பிரதீப் அனுப்பினார்.

10 எதிர் சப்தங்கள்:

தாணு said...

மணிகண்டன்,
பங்களாப்புதூர் போற ரோட்டை மட்டும் காட்டிட்டு கரட்டடிபா.ன்னு சொல்லக்கூடாது. கோபி ஆர்ட்ஸுக்கு ரோடு பிரியிற கச கசப்பும் காடணுமில்லே! ஆனாலும் போட்டோக்களெல்லாம் அருமை.

குமரன் (Kumaran) said...

கரட்டடிபாளையம் படங்கள் பசுமையாக இருக்கின்றன மணிகண்டன்.

மழை தேவையில்லாத ஊருக்குள் எதற்கு ஏழு மாரியாத்தா? நல்ல கேள்வி தான். :-)

கம்பம் வெட்டுதல் என்றால் என்ன மணிகண்டன்? ஏற்கனவே சொல்லியிருக்கீங்களா? அப்படி என்றால் சுட்டியைத் தாருங்கள்.

Anonymous said...

மணிகண்டன் வர்ணனையும், புகைப்படங்களும் ரொம்ப நல்லா இருக்கு. ப்ரதீப்க்கு என் வாழ்த்துக்கள். நேரில் பார்க்கும் ஆவலை தூண்டும் படங்கள்.

சில்வண்டு.

தமிழ்நதி said...

இந்த ஊருக்குக் கட்டாயம் போய்ப்பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியிருக்கின்றன பதிவும் பசுமைப் படங்களும். கடவுள் என்று ஒருவர் இருந்து இந்த இயற்கையை அவர்தான் படைத்திருந்தால் எவ்வளவு பெரிய கலாரசிகன் அவன்.

சிவபாலன் said...

மணிகண்டன்,

நல்ல படங்கள்!!

நேரில் சென்ற அனுபவத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்!!

பதிவுக்கு மிக்க நன்றி

Anonymous said...

ஆஹா.எங்கூருக்கு (B.P) நேர்ல போகலைன்னாலும்,ஊருக்கு போகற ரோட்ட பார்த்தாலே சந்தோஷமா இருக்கு.3B/VBS/etc வண்டீல ஜன்னலோரத்துல போகற உணர்வை தந்துட்டீங்க...நன்றி
-பூர்ணிமா

ILA (a) இளா said...

ஹ்ம்ம், நம்ம ஊர்ப்பக்கத்தை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..

///கோபி ஆர்ட்ஸுக்கு ரோடு பிரியிற கச கசப்பும் காடணுமில்லே! ஆனாலும் போட்டோக்களெல்லாம் அருமை.//
டாக்டருக்கா(தாணு), சவுக்கியமா? பதிவுலகம் பக்கம் கூட கை நனைப்பீங்க போல தெரியுதே..

Ananth said...

நரம்பு 'வெட்டி'க்கவுண்டர்கள்ன்னு ஞாபகம். ஏனுங்க, கொங்கு வேளாளர்களை மறந்துட்டீங்களே. தோல உரிச்சிப்போடப் போறாங்க :)

அழகான இடங்கள், அழகான படங்கள். மலரும் நினைவுகள்! நன்றி.

Sivasubramaniam Arunachalam said...

அருமையான படங்கள்!

Indian said...

//நரம்பு 'வெட்டி'க்கவுண்டர்கள்ன்னு ஞாபகம். ஏனுங்க, கொங்கு வேளாளர்களை மறந்துட்டீங்களே. தோல உரிச்சிப்போடப் போறாங்க :)//

Kongu Vellalars( including Vellala Gounder, Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar, Thondu Vellalar, Pala Gounder, Poosari, Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pallavellala Gounder, Sanku Vellala Gounder and Rathinagiri Gounder).