May 24, 2006

பின்னூட்ட மாற்றம்.(எடிட்)

உங்களுக்கு வரும் பின்னூட்டங்களை எளிதாக எடிட் செய்துகொள்ள முடியும். திரு.கோகுல் குமார் இது பற்றி ஏற்கனவே எழுதி இருந்தார். ஆனால் சிறு பிரச்சினையை சந்திக்க வேண்டி இருந்தது.

பின்வரும் இந்த வழிமுறை எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்.

முதலில் பின்னூட்ட பக்கத்திற்கு செல்லுங்கள். ஒரு அழிப்பானின்(Delete Image) படம் இருக்கிறது அல்லவா? அதன் மீது ரைட் கிளிக் செய்து Copy Shortcut தேர்ந்தெடுங்கள்.

இப்போழுது அதனை பிரவுசரில் URL இடும் இடத்தில் இடுங்கள்.

உதாரணம்:
http://www.blogger.com/delete-comment.g?blogID=10674130&postID=114811032580799319

இதனில் delete-comment.g க்கு பதிலாக post-edit.g என மாற்றி தட்டச்சு செய்யுங்கள்.

இப்பொழுது Enter செய்து உள்நுழைந்தால் உங்களின் பெயரும்,கடவுச்சொல்லும் கேட்கப்படும்.

நுழைந்து மாற்றிக் கொள்ளலாம்.

(குறிப்பு கொடுத்த திரு.கோகுல்குமாருக்கு நன்றிகள்)

13 எதிர் சப்தங்கள்:

லக்கிலுக் said...

இது ரொம்பவும் ஆபத்தாச்சே.... நாம சொல்லாததை எல்லாம் சொன்னதா யாராவது எடிட் பண்ணி சேத்துட்டாங்கன்னா?

Vaa.Manikandan said...

கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.தவறான உபயோகம் என்பதற்காக நிறுத்தி வைக்க முடியுமா?

Thats Secret said...

நன்றி மணிகண்டன் கொஞ்சம் அவசரத்தில் எழுதியதால் அன்று நான் அதை டெஸ்ட் செய்யவே இல்லை ஏகப்பட்ட குட்டுகள் இன்னொரு பதிவிட வேண்டுமா என்று கூட நினைத்தேன் உங்களைப்போல நிறைய நண்பர்கள் மாற்று வழிகள் எழுதுவதால் நான் தப்பித்துக் கொள்கிறேன் ;)

குமரன் (Kumaran) said...

நன்றி மணிகண்டன்.

பொன்ஸ்~~Poorna said...

வரலீங்க!!
=>
The blog you were looking for was not found.

Vaa.Manikandan said...

Pons, I think you are only facing the problem. please try once again with correct case.
otherwise let me try tomo.

Vaa.Manikandan said...

pons,
again checked. damn sure. it is working.

பொன்ஸ்~~Poorna said...

Not working :( எனக்கு மட்டுமோ?!! மேலே உள்ள என் பின்னூட்டத்தை நான் மாற்ற முடிய வேண்டும் அதுதானே நீங்கள் சொல்வதும்?!!

Unknown said...

i think only manikandan can edit his blog's comments because it expects him to be logged in. if anybody else enters his/her login info, Blogger will keep asking him to login again.

Vaa.Manikandan said...

yes,I can modify comment in my blog. u can modify comments in ue blog. what else?

பொன்ஸ்~~Poorna said...

ஓஒ.. ஓகே.. அப்போ தெரியாதவங்க வீட்ல போய் பின்னூட்டம் போடக் கூடாது.. அவங்க இஷ்டத்துக்கு மாத்திகிட்டா என்ன செய்யறது!! :)

Vaa.Manikandan said...

மற்றவர்களின் பதிவில் நமது பின்னூட்டங்களை மாற்ற இயலுமா எனத் தெரியவில்லை. முயன்றுதான் பார்ப்போமே. குறைந்த பட்சம் நமக்கு வரும் பின்னூட்டங்களில் தவிர்க்கப் பட வேண்டிய சொல்லினை தவிர்க்க உதவும். ஆனால் இது மோசமான வழிகளில் பயன்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Hi,
This is not working.
I try with post-edit instead of delete-comment,but seems it is not working.
Is there any case sensitivity there,pl explain.
Thanks