Feb 1, 2006

பிரகதீஸ்வரர் புகைப்படம் & என் கணித மதிப்பெண்

சாமி கும்பிடுவீங்களா? என் அறைத்தோழர் என்னைப் பார்த்தவுடன் கேட்டார். ஏன் என்று தெரியவில்லை. இந்தக் வினாவினை பலர் பலமுறை என்னிடம் கேட்டுள்ளனர். என் முகம் அப்படிப் பட்டதாக இருக்கும் என நினைக்கிறேன். எங்கள் ஊர்ப் பக்கம் பெரியாரின் விசுவாசிகள் மிக அதிகம். எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நிறைய முறை கடவுள் இல்லை என்று பேசி அம்மாவிடம் (என் அம்மா. தமிழ்நாட்டில் அம்மா என்ற சொல் குத்தகைக்கு எடுக்கபட்டுள்ளது) வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு. எப்போதும் கணிதத்தில் அடித்து பிடித்து தேர்ச்சி பெற்றுவிடுவேன். அந்த முறை கோட்டை விட்டுவிட்டேன். மதிப்பெண் பட்டியலும் வந்துவிட்டது. கொஞ்ச நாள் சொல்லாமல் சமாளித்தேன். ஆனால் தகுதிப் பட்டியலில் கையொப்பம் வாங்க வேண்டுமே. அடுத்த நாள் காலையில் அம்மாவிடம் ஒரு பொய் சொன்னேன். இரவில் ஒரு கொடூரக் கனவு கண்டேன். அதில் ஒரு காட்டினுள் மாட்டிக் கொண்டதாகவும், அப்போது ஒரு ஒளிவட்டம் தோன்றி எனக்கு ஒரு சிறிய பிரச்சினை இன்று வரும். (இதுவரை இழிவாகப் பேசியதற்கான தண்டனை) இனிமேல் என்னை வணங்கு, சரியாகிவிடும் என்று சொன்னதாகவும். அம்மாவுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் பையன் வழிக்கு வந்தான் என எதுவும் சொல்ல வில்லை என நினைக்கிறேன்.

அதன் பிறகு மதிப்பெணை அந்த நாளின் மாலையில் சொன்னபோதும் ஒரு மெல்லிய சிரிப்பைத் தவிர எந்த திட்டும் இல்லை. அடுத்த முறை நன்றாகப் படி என்று அறிவுரை தான். இருந்தாலும் அப்பா அடி பின்னிவிட்டார். அதன் பின்னர் பலமுறை அம்மாவுடன் கோயிலுக்குப் போனாலும் வணங்காமல் நிற்பேன்.

ஒரு நாள் அம்மா சொன்னார். நீ கடவுளை வணங்குவது தெரியும், என்கிட்ட நடிக்க வேண்டாம் என்று. ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை.

(பி.குறிப்பு: இந்தப் புகைப்படம் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தது. இதனைப் பதிப்பிக்க எனக்குத் தெரிந்த ஆன்மிகம் எழுத வேண்டும் அல்லவா? அதுதான் மேற்கண்ட சிறுகுறிப்பு. மற்ற படி வேறு எதுவும் இல்லை. புகைப்படம் எப்படி உள்ளது? ஏற்கனவே யாரவது வலைப் பதிவில் போட்டிருக்கிறார்களா?)

Image hosting by Photobucket

9 எதிர் சப்தங்கள்:

Amar said...

பிரகதீஸ்வரரை பார்க்க எனக்கு இன்னும் கொடுத்த வெய்க்கவில்லை.

:-(

அனால் கடவுள் இல்லை என்று சொல்லும் பெரியாரின் விசுவாசிகள் இதை கவனிக்க வேண்டும்.

மின்சாரத்தை கண்டுபிடிக்க எத்தனை வருடங்கள் ஆனது.

எடிஸன் மின்சார Bulbஐ கண்டுபிடிக்க எத்தனை சிரமபட்டார் என்று அனைவருக்கும் தெரியும்.

சாதாரன உலக விஷயம் இவை எல்லாம்.இவைகளையே இவ்வளவ்வு கஷ்டபட்டு "தேடினால் தான் கிடைக்கிறது".

தெய்வம் மட்டும் நினைத்த உடன் வந்த காட்சி தர வேண்டுமா?

:-)

G.Ragavan said...

பெருவுடையாரின் அலங்காரமே ஒரு கலைதான். மிகவும் அருமை. உங்கள் வாழ்க்கை நிகழ்ச்சியும் கூட.

Karthik Jayanth said...

மணி,
எனக்கும் இந்த படம் மைல்லில் வந்தது.ஆனால் சிறிய படம்.

Boston Bala said...

Karthik Jayanth: Lord Siva

நந்தன் | Nandhan said...

எனக்கும் இது மெயிலில் வந்தது.
"சாமி கும்பிடுவீங்களா? என் அறைத்தோழர் என்னைப் பார்த்தவுடன் கேட்டார்" நிறைய பேரு என்னை பாத்தும் இந்த கேள்வி கேக்கறாங்க!

Karthik Jayanth said...

Thanks for giving the link Boston bala sir.

Vaa.Manikandan said...

//தெய்வம் மட்டும் நினைத்த உடன் வந்த காட்சி தர வேண்டுமா//
சமுத்ரா நினைத்தவுடன் காட்ச்சி தர வேண்டாம். சாவதற்குள் ஒரு முறையாவது :)

நன்றி ராகவன்,கார்த்திக், பாலா.

நந்தா என்ன சத்தமே இல்லை?

Amar said...

/சமுத்ரா நினைத்தவுடன் காட்ச்சி தர வேண்டாம். சாவதற்குள் ஒரு முறையாவது :)//

அது சரி.
தேடினா கண்டிப்பா கிடைக்கும்.

எதுக்கும் உங்களை சுத்தி பாருங்கள் - எத்தனை தெய்வங்கள் உங்கள் பக்கதிலேயே உள்ளன. :)

Vaa.Manikandan said...

சுற்றிப் பார்த்தால் தெய்வம் இருக்குமா?
எந்த தெய்வமும் கற்பூரம் காட்டி கிடா வெட்ட வரைக்கும் நின்னுட்டு இருக்க மாட்டேங்குதுங்க!.