Jan 15, 2006

சொற்கள்-எனக்கு பிடிக்காத கவிதை ஒன்று!

சொற்கள்
தொலைந்து போகின்றன.

இரவில்
மனிதர்களை வட்டமிட்டு
விடியலில்
பனித்துளி கசியும்
புற்களினூடாக புதைந்து
கொள்கின்றன.

பற்களின் இடுக்கு
தொலைபேசியின் திருகலான
வயர் அல்லது
பக்கத்துவீட்டு கதவின்
அடிப்பகுதியில்
என சொற்கள்
சிக்குண்டு கொள்ளும்
இடங்கள் பற்றித் தெரியும்.

நேற்று
ஏ.டி.எம்-ன்
பணம் வெளியேறும்
துளையில் சொல்லொன்று
ஒளிந்திருப்பதைக்
கண்டேன்.

சொற்களுக்கு
இப்போது தேவை
நல்ல ஒரு இடம்-
மனித வாடையற்று.

8 எதிர் சப்தங்கள்:

Vaa.Manikandan said...

test comment

ilavanji said...

//சொற்களுக்கு
இப்போது தேவை
நல்ல ஒரு இடம்-
மனித வாடையற்று.// அப்பறம் யாரு மேன் அந்த சொற்களை சொல்லறது?!

மணி, நல்லாத்தான்யா இருந்தீரு?! வீட்டுல பொண்ணு பாக்கறாங்களா என்ன??

பொன்ஸ்~~Poorna said...

//சொற்களுக்கு
இப்போது தேவை
நல்ல ஒரு இடம்-
மனித வாடையற்று.//
மனித வாடையற்ற இடங்கள்ல சொற்கள் என்ன செய்யும்??

நாமக்கல் சிபி said...

//மணி, நல்லாத்தான்யா இருந்தீரு?! //

என் பணி இனிதே முடிந்தது. அடுத்தது யாருங்கோ............வ்?

Vaa.Manikandan said...

இளவஞ்சி,
அது மட்டும்தான் குறைச்சல். ;)

பொன்ஸ்,
அதை நீங்க இப்படி பார்க்கிறீங்களா?

நான் என்ன சொல்ல முயன்றது,
சொற்கள் மிக அதிகமாகப் பயன்படுத்தப் பட்டு, அவை அலைகழிக்கப் படுகின்றன.தேவையற்ற இடங்களில் எல்லாம் சொற்களை உபயோகப் படுத்துவதும் அங்கு குறிபிட வேண்டும் என எழுதப்பட்டது. சுருக்கமாக பேச்சு அதிகமானதனை.

லாஜிக் பார்த்தால் முதல் பத்தி அடிபடும்.

//இரவில்
மனிதர்களை வட்டமிட்டு
விடியலில்
பனித்துளி கசியும்
புற்களினூடாக புதைந்து
கொள்கின்றன.//

சிபி..நீங்க யாரு....நான் யாரு...:)

VSK said...

புரிகிறது!
தமிழ்மணத்தில் தற்சமயம் "சொற்கள்" படும் பாட்டைக் கண்டு எழுந்த கவிதையோ!!??

:))

நாமக்கல் சிபி said...

//சிபி..நீங்க யாரு....நான் யாரு//

என் பணிதான் முடிந்து விட்டது!
இப்பணியை இனி என் பாசமிகு நண்பர் எஸ்.கே தொடர்வார்.

:)))

ப்ரியன் said...

ரொம்ப நல்லாதானே இருக்கு மணிகண்டன்