Jul 5, 2005

வந்துட்டான்யா....வந்துட்டான்!

ஐதராபாத் வந்து விட்டேன்.வேற என்ன?எல்லாம் பிழைப்புக்காகத்தான்!.தெலுங்கு ம் தெரியாது.இந்தியும் தெரியாது.எல்லோரிடமும் நாக்கு தள்ளிதுனு சொல்லி சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது.காரம் வேறு.சென்னை யின் இனிய புகை வாசனை,கூட்டமான பேருந்து எல்லாவற்றையும் இழக்க வேண்டியாதாகி விட்டது.

இரண்டு நாட்களுக்கு என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை.இப்போது தெரிகிறது அல்லது வலிக்கிறது.பிரிவின் வலி.ஊர் கடந்ததே இப்படி எனில்,நாடு கடந்தால்?கொடுமைதான்.தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி.

சரி அது எல்லாம் பின்னால் பேசலாம்.இப்போதைக்கு இது போதும்.ப்ரவுசிங் சென்டரில் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.சட்டையில் பணம் வேறு குறைவாக இருக்கிறது.தெலுங்கு அடி வாங்க இன்னும் காலம் இருக்கிறது.வந்தவுடன் எதுக்கு?

8 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

மணிகண்டன்,

தங்களின் ஹைத்ராபாத் வருகை நல்வரவாகுக.

நானும் வந்த முதல் 6 மாதங்களுக்கு எப்படியாவது பணி மாற்றம் செய்து கொண்டு ஓடிவிடத்தான் நினைத்தேன். ஆனால் இப்போது அந்த எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது.

உங்களுக்கு உதவ சில குறிப்புகள்:
1) http://www.sirigina.com/learn மூலமாக தெலுங்கு கற்றுக் கொள்ளுங்கள். முதலில் எழுதப் படிக்க கற்றுக் கொண்டால் பேச மிக எளிதாய் வரும்.

2) தெலுங்கு நண்பர்களை நிறைய ஏற்படுத்திக் கொள்ளுங்கள், தெலுங்கு திரைப்படங்கள், ஜெமினி/மா/தேஜா தொலைக்காட்சிகளை அடிக்கடி பாருங்கள்.

3) காரமும்/எண்ணையும் பழகிக் கொள்ளுங்கள் அல்லது வீட்டில் சமைக்க கற்றுக்கொள்ளுங்கள் வேறு வழியில்லை.

4) எனது அனுபவத்தில் தெலுங்கு கற்பது ஹிந்தி கற்பதை விட எளிது (கற்பது என்றால் மொழி மட்டுமல்ல, மக்கள்.. கலாச்சாரம்.. பழக்கங்கள்) தெலுங்கருக்கும் தமிழருக்கும் பழக்கவழக்கங்கள் கலாச்சாரம் ஆகியன ஒன்றே.. ஆகவே தெரியாமல் ஏது செய்து தர்ம அடி வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வராது.

வாழ்த்துக்கள்.. நேரமிருந்தால் எனக்கு தனி மின்னஞ்சல் அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி எனது வலைப்பூவில்.

வீ. எம் said...

//ஐதராபாத் வந்து விட்டேன்.வேற என்ன?எல்லாம் பிழைப்புக்காகத்தான்!.//

கவலை படாதீங்க மனி, சும்மா எல்லா தமிழ் வார்த்தைக்கு முடிவுல "லு" , "யா", "வா" சேர்த்துக்கோங்க ..மேட்டர் ஓவர்.. தெலுங்கு ரெடி ! :)

இப்பொதைக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவி

வரீயா - ஒஸ்தாவா?
இருக்கா - உந்தியா?
இல்லை - லேது
இங்கே - இக்கட
அங்கே - அக்கட
என்ன - ஏமி

காமிங்க - சூபி
போறேன் - போத்தாம்
சாதம் - அன்னம்
கொழம்பு - புலுசு
நல்லா இருக்கா - பாக உந்தியா
சொல்லு - செப்பு
வா - ரா
அப்புறம் கீழே இந்த வார்த்தையை கண்டிப்பாக தெலுங்கு தெரியாத பொன்னுங்க கிட்ட சொல்லாதீங்க.அப்புறம் நான் பொறுப்பல்ல :)


நாளை - ரேப்பு
நாளைக்கு வரீயா - ரேப்புக்கு ஒஸ்தாவா??


இன்னும் சில வார்த்தைகள் அடுத்து வரும்போது ! :)

வீ எம்

Voice on Wings said...

Welcome to Hyd :) Pls dont follow the advise of Gopi and (especially) VM :) I'll try to write a detailed post when i have time. Thx.

Vaa.Manikandan said...

Thanks Voice,Gopi and VM.

shall v form one team here?

துளசி கோபால் said...

கவலைப்படாதீங்க. எல்லாத்துலேயும் 'லு' சேர்த்துக்கலாம்! ஆனா வீ.எம். சொன்ன 'ரேப்புக்கு ஒஸ்தாவா?' மட்டும் ஆபத்து:-))))

என்றும் அன்புடன்,
துளசி.

நந்தன் | Nandhan said...

You can get v.good tamil food near Paradise junction sec'bad (Take the HDFC bank road - Phenderghast road) Sri Saravana bavan. romba naaliku aprom veetu sapaatu mathiri oru food :) It is a new joint, and always crowded. Send me a mail if you want anyhelp. mail id is in my blog.

பாலராஜன்கீதா said...

நான் விஜயவாடா அருகில் குண்டூரில் நான்கு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் நான் நான்கு வருடங்களில் கற்றுக்கொண்டதைவிட அதிகமாக என் இல்லத்தரசி ஆறே மாதங்களில் கற்றுக்கொண்டார்கள். அதிகம் தெலுங்கு கற்றுக்கொண்டது, நண்பர்களின் இல்லத்து இளஞ்சிறார்களிடம்தான். தப்புதப்பாகப் பேசுகிறோமா என்றெல்லாம் கவலைப்படாமல் பேச முயன்றால்தான் கற்றுக்கொள்ளமுடியும்.

விருப்பமும் வாய்ப்பும்தான் முக்கியம்.:-))

ஜீவ கரிகாலன் said...

உண்மைய சொல்லுங்க தெலுங்கு கத்துகிட்டீங்களா?

இல்லை நிறைய புத்தகம் படித்த திருப்தியுடன் பெங்களூர் வந்துட்டீங்களா?