Apr 20, 2005

நிழல்-உயிர்மை கவிதை

Image hosted by Photobucket.com
நகர்ந்து கொண்டிருக்கிறது
மங்கலான அடர்த்தியான நிழல்

எனக்கு முன்பாகவும்,
நீளம் குறைந்து காலடியில்
பதுங்கியும்.

பின்புறமாகவும் நீள்கிறது.
நடுங்காமல்,நேர்த்தியாக.

நிழல் எந்தப்பக்கம் எனினும்,

சரளைக் கற்களினூடே புதையும் பாதங்களின்
ஒலிமட்டும் ஒரே திசையில்.

நன்றி:உயிர்மை-ஏப்ரல்'2005

2 எதிர் சப்தங்கள்:

Ganesh Gopalasubramanian said...

இது ஒரு விசித்திரமாக இருக்கிறதே
நிகழ்வுகளை மட்டுமே குறிக்கிறதா அல்லது "உள்" நோக்கம் ஏதும் உள்ளதா?

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...