Apr 12, 2005

அது பிசாசு போலவே இல்லை!

Image hosted by Photobucket.com
அது
பிசாசு
போலவே இல்லை

மெழுகுவர்த்தியின்
வெளிச்சம்
என
உள் நுழைந்தது

காற்றில்
விரவிகிடக்கும்
பஞ்சுத்துகளின்
மென்மையில் தலை கோதித்-
தந்தது

மெல்லிய
விசும்பலுடன்
நிறைய பேசி,

என் மனைவியின்
மார்பில்
பார்வையை நிறுத்தியது.

இப்போது
தெரிந்தது
அதன்
பல்லில்-படிந்திருந்த
ஒரு துளி இரத்தம்.

3 எதிர் சப்தங்கள்:

வசந்தன்(Vasanthan) said...

நல்லாயிருக்கு.
தொடர்ந்து எழுதுங்கோ.
உங்கட விக்கிபீடியா முயற்சிக்கும் என்ர பாராட்டுக்கள்.

Vaa.Manikandan said...

நன்றி வசந்தன்!
பொயெட் சும்மா இருங்கய்யா!

கமலேஷ் said...

மிகவும் அட்டகாசமான கவிதை இது.

நல்ல நுணுக்கம்.

இதுவரை கவிதைகளில் பேசாதது என்பதாலோ என்னவோ
மிகவும் கவர்கிறது.

தலைப்பு அட்டகாசம்.