Mar 14, 2007

மனுஷ்ய புத்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று (மார்ச் 15) பிறந்த நாள் கொண்டாடும் என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

(1)
மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருகின்றன

ஒரு மீன்
துள்ளுகிறது.

சும்மா
துள்ளுகிறது.

யாரும் பதட்டமடையத் தேவையில்லை.
எனக்கு உறுதியாகத் தெரியும்
ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது.

(2)
உன் கண்கள்
இங்கே எதையுமே
பார்ப்பதில்லை

ஒழுங்குகளை
ரகசியங்களை
பலவீனங்களை
எப்போதும் கசிந்துகொண்டிருக்கும்
காயங்களை

ஒன்றையும்
அவை உற்றுப் பார்ப்பதில்லை.
உன் கண்கள்
கண்களை மட்டுமே
சந்திக்கின்றன.

3 எதிர் சப்தங்கள்:

முபாரக் said...

எனது வாழ்த்துக்களும் !!!

"தாவரங்கள் இடம்பெயராது
என்று சொன்ன தாவரவியல்
பேராசிரியரைத் தண்டிக்கவேண்டும்
இங்கே ஒரு நந்தவனம்
நடந்து போவது தெரியாமல்"

(மனுஷ்யபுத்திரன் கவிதைகள் - முதல் தொகுப்பு)

மணி எங்கே இத்தன நாளா ஆளக் காணோம்?

சினேகபூர்வம்
முபாரக்

கார்திக்வேலு said...

மணி.
நான் லேட்
இருப்பினும் வாழ்த்துக்கள் .
------
தற்சமயங்களில் அவர் என்ன எழுதுகிறார்.
அவருடைய சமீபத்திய எழுத்துக்கும் ஆரம்ப நிலையில்
எழுதியதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

மீன் மிக அருமையான ஒரு கவிதை.

Ayyanar Viswanath said...

அடடா தெரியாம போச்சே ம பு வின் பிறந்த நாள்..:(

என் இன்றைய நாளின் கவிதை

குட்டி இளவரசி சஹானா
நாளைக்கு மழை பெய்தது
என்றாள் அமைதியாக